பாற்றுறை (திருப்பாற்றுறை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு மோகநாயகி உடனுறை திருமூலநாதர்


குளம்: திருக்குளம்

பதிகம்: காரார்கொன்றை -1 -56 திருஞானசம்பந்தர்

முகவரி: திருப்பாற்றுறை அஞ்சல்
திருவானைக்கா
திருச்சி வட்டம்
திருச்சி மாவட்டம், 620005
தொபே. 0431 2060455

சோழ வளநாட்டுக் காவிரி வடகரைத்தலம் . திருச்சிராப்பள்ளி யிலிருந்து கல்லணை செல்லும் பேருந்தில் ஏறி, பனையபுரம் என்ற ஊரில் இறங்கி, வடக்குநோக்கி வரவேண்டும். இத்தலத்துப்போந்த மார்க்கண்டேயமுனிவர் சிவபூசைக்குப் பால் இல்லாமையால் வருந்திய போது, சிவபெருமான் அருளினால் பால் பெருகியது ஆதலால் இப்பெயர் எய்தியது. கொள்ளிட நதியின் தென்கரையில் உள்ளது.

இறைவன்பெயர் திருமூலநாதர் , மூலநாதேசுவரர்; இறைவி யின் பெயர் மோகநாயகி, மேகலாம்பிகை; தீர்த்தம் - திருக்குளம். இடம் திருவானைக்காவிலிருந்து கிழக்கே 8 கி.மீ.தூரத்தில் உள்ளது.
கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றி அரசியலாரால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பதினாறு உள்ளன. அவை முதற்பராந்தகன் பரகேசரி வர்மனான விக்கிரமசோழன், இராஜராஜன், இராஜேந்திர சோழ தேவன் காலத்தன. அவற்றால் இத்தலம் கொள்ளிடத்துத் தென் கரைநாட்டுப் பிரமதேயமான உத்தமசீலி சதுர்வேதிமங்கலத்துத் திருப்பால்துறை என விக்கிரமசோழன் காலத்துக் குறிப்பிடப்படுகிறது.(1575 of 1908)இறைவன் திருப்பால்துறை மகாதேவர்( 2575 of 1908) என்றும் திருப்பால்துறை நாயனார் என்றும் (582) திருப்பால்துறை உடையார் (582)என்றும் வழங்கப் படுகிறார். கல்வெட்டுக் குறிப்பாளர் ஆதிமூலேசுவரர் என்று அழைக் கிறார். தலம் திருப்பாலைத்துறை என இக்காலத்து வழங்குகிறது. கோயிலுக்கண்மையில் திருநாவுக்கரசர் திருமடமும்(583) ஆண்டார் எம்பிரானார் மடம் எனப்பெரிய லிங்கிய சந்தானத்து மடமும்(584) திருவானைக்கா திருஞானசம்பந்தர் மடமும்(585) நாற்பத்தெண்ணாயிர வர் திருமடமும்(586)இருந்தனவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு அரசர்கள் நிலம் வழங்கிய செய்தியும் குறிக்கப்படுகின்றன.

ஏனைய கல்வெட்டுக்கள் திருக்கோயிலுக்கு விளக்கிற்காக நிலமும் பசுவும் ஆடும்விட்ட செய்தியை அறிவிப்பன. இவையன்றி, கோயிலுக்கு வடபக்கத்தில் காக்கும் நாயகன்மடம் என்ற ஒன்று இருந்ததாகவும் அதற்கு மும்முடிச் சோழமங்கலத்துச் சபையார் நிலமளித்ததாகவும்தெரிகிறது.

(582)திருப்பனம்பூதூர் பரமேசுவரருக்கு அரிகுலகேசரிதேவரால் உத்தமசீலி சதுர்வேதி மங்கலத்து நிலம்விட்ட செய்தியும் அறியப்படுகிற்து.

 
 
சிற்பி சிற்பி