பாலைத்துறை (திருப்பாலைத்துறை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு தவளவெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர்


குளம்: காவிரி

பதிகம்: நீலமாமணி -5 -51 திருநாவுக்கரசர்

முகவரி: திருப்பாலைத்துறை அஞ்சல்
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 614205
தொபே. 9443524410

தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் தொடர்வண்டி நிலையத் துக்கு வடகிழக்கே 1.5 கி. மீ. தொலைவில் உளது. கும்பகோணம் - பாபநாசம் பேருந்து வழித்தடத்தில் இக்கோயில் உளது.

இறைவர் பெயர்: பாலைவனநாதர். இறைவி பெயர்: தவள வெண்ணகையாள். இத்திருப்பெயரை, அப்பர் பெருமான் இவ்வூர்க் குறுந்தொகைப் பதிகத்தில் ``தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்`` என்று எடுத்தாண்டிருப்பது மகிழ்தற்குரியதாகும்.

தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய புலியின் தோலைச் சிவபெருமான் உரித்து அதை அணிந்துகொண்ட தலம். பதிகம் ஒன்று.
கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் முதற்குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் இவர்களின் காலங்களிற் செதுக்கப்பட்ட கல் வெட்டுக்கள் இருக்கின்றன. (வீவுவு மலீவு ‹ிக்க்ழுஹிப ட்வுஷிணூநீமஸ் ணூக் வீணூழுமலீ ருக்னாயுஹிக் ணஷியுணாநீஹிஷிலீவி சூணூநீ மலீவு விவுஹிநீ 1912 குணூ. 433442)இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருப் பாலைத்துறை மகாதேவர் என்னும் பெயரால் குறிக்கப் பெற்றுள்ளனர்.

இக்கோயிலின் கிழக்குத் தாழ்வாரத்தில் நீலகங்கரையனால் எழுந்தருளுவிக்கப்பெற்ற திருஞானசம்பந்த ஈஸ்வரமுடையார்க்குத் திருச்சிற்றம்பல நல்லூரிலும் இராஜகம்பீர நல்லூரிலும் மூன்றாம் இராஜராஜ சோழனின் 28ஆம் ஆட்சி ஆண்டில் நிலம் அளிக்கப் பெற்றிருந்தது.

இக்கோயிலில் உள்ள இரண்டாம் இராஜராஜசோழன் கல்வெட்டு, முதற் குலோத்துங்க சோழனின் 45ஆவது ஆண்டில் நில அளவு செய்யப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது. நாள் வழிபாட்டிற்கும் திருநந்தவனத்துக்கும் நில நிவந்தங்கள் அளிக்கப்பெற்றிருந்தன.

இத்திருப்பாலைத்துறை நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டிற்கு உட்பட்ட ஊராய்த் திகழ்ந்தது.

 
 
சிற்பி சிற்பி