பாசூர் (திருப்பாசூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பசுபதிநாயகி உடனுறை பாசூர்நாதர்


மரம்: மூங்கில்
குளம்: சோழ தீர்த்தம்

பதிகங்கள்: சிந்தையிடை -2 -60 திருஞானசம்பந்தர்
முந்திமூவெயில் -5 -25 திருநாவுக்கரசர்
விண்ணாகி -6 -83 திருநாவுக்கரசர்

முகவரி: திருபாசூர் அஞ்சல்
கடம்பத்தூர் அஞ்சல்
திருவள்ளூர் வட்டம்
திருவள்ளூர் மாவட்டம், 631203
தொபே. 9894486890

பசுமை + ஊர் = பாசூர். நீர்வளத்தால் நிலம் பசுமையாய் விளங்குவதால் இப்பெயர்பெற்றதாதல் வேண்டும். தலமரம் மூங்கில் ஆதலாலும், இறைவர் மூங்கிலடியில் முளைத்தவர் ஆதலாலும் இப்பெயர்பெற்றனர் என்பர். (பாசு = மூங்கில்).

இது திருவள்ளூர்க்கு வடக்கில் 5 கி.மீ. தூரத்தில் இருக் கின்றது. திருவள்ளூர் - பேரம்போக்கம் நகரப் பேருந்திலோ காஞ்சி புரத்திலிருந்து கடம்பத்தூர் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பேருந்திலோ பாசூர் செல்லலாம்.

இறைவர் திருப்பெயர் பாசூர்நாதர். இறைவி திருப்பெயர் பசுபதிநாயகி.

குறும்பர் அரசனுக்குச் சார்பாகச் சமணர்கள் கரிகால் சோழன் மீது ஏவிய பாம்பைச் சிவபெருமான் எழுந்தருளித் தடுத்து ஆட்டினார் என்பது தலமான்மியம். இச்செய்தி, ``படவரவொன்றது ஆட்டிப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே`` என்னும் இத்தலத்துக் குரிய திருத்தாண்டகப் பகுதியாலும் இது உறுதி எய்து கின்றது. சந்திரன் பூசித்துப் பேறு பெற்றான்.

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, நாவுக்கரசர் பதிகங்கள் இரண்டு ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. இது தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.கல்வெட்டு:

இங்குள்ள கோயிலில் பதினாறு கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன. தொண்டைமண்டலம், ஈக்காடு கோட்டம், காக்கலூர் நாட்டுத் திருப்பாசூர் என்று கண்டிருக்கின்றது.

இராஜராஜன் நாளில் பூசைக்காகப் பட்டமாருக்கு நாற்பத் தேழுகாசு தரப்பட்டது. அதேகாலத்தில் விளக்கிற்காக முப்பத்திரண்டு பசுவும், முரசிற்காக ஒரு இடபமும் தரப்பட்டன. குலோத்துங்கன் நாளில் நாற்பத்தெண்ணாயிரனது மகள் ஒரு திருவாபரணத்திற்காக முப்பதுகாசும், நாள் ஒன்றிற்கு இரண்டுபடி அரிசியும் தந்தாள். ஒரு காளிங்கராயன் பத்து விளக்குக்களுக்காக எழுபத்தெட்டுக்காசு கொடுத் துள்ளான். வீரகம்பணன் நாளில் ஒருவன் ஒரு தோட்டத்தைக் கொடுத் துள்ளான்.

 
 
சிற்பி சிற்பி