பாச்சிலாச்சிராமம் (திருப்பாச்சிலாச்சிராமம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பாலசௌந்தரி உடனுறை மாற்றறிவரதர்


மரம்: வன்னிமரம்
குளம்: அன்னமாம் பொய்கை, சிலம்பு நதி

பதிகங்கள்: துணிவளர் -1 -44 திருஞானசம்பந்தர்
வைத்தனன் -7 -14 சுந்தரர்

முகவரி: திருவாசி அஞ்சல்
பிச்சாண்டார்கோயில்
திருச்சி மாவட்டம், 621216

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். திருச்சி - முசிறி பேருந்து வழித்தடத்தில் உள்ளது. பாச்சில் கூற்றத்து ஆச்சிராமமாதலின், பாச்சிலாச்சிராமம் என வழங்கப்படுகிறது.

கல்வெட்டுக்களில் கொள்ளிடத்தின் வடபகுதி பாச்சில் கூற்றம், வடகரை மழபாடி நாடு, இராஜாதிராஜ வளநாடு எனப் பல பகுதிகளால் வழங்கப்பெற்றதாகத் தெரிகின்றது. கொல்லிமழவன் புதல்விக்கு உற்ற முயலகன் என்னும் நோயைத் திருஞானசம்பந்த சுவாமிகள் நீக்கியருளிய தலம். இங்குள்ள நடராஜர் திருவுருவிலும் முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. திருவடியின்கீழ் அதற்குப்பதில் ஒரு பெரும்பாம்பிருக்கிறது. சுந்தரமூர்த்திசுவாமிகள் `இவரலாதில்லையோ பிரான்` என இகழ்ந்து பேசிப் பொருள் மிகப் பெற்றதலம். இறைவனே ஒரு வைசியன் பெண்ணை மணஞ்செய்து கொண்ட தலம்.

இறைவன்பெயர் மாற்றறிவரதர், சமீவனேசுவரர்; அம்மை யின்பெயர் பாலசௌந்தரி; தீர்த்தம் அன்னமாம் பொய்கை, சிலம்புநதி. பொய்கை, அம்பாள் கோயிலுக்கு எதிரில் இருக்கின்றது. இதன்கரை யில் தலவிருட்சமாகிய வன்னிமரம் இருக்கின்றது. சிலம்புநதி ஊருக்கு வடக்கில் ஓடுகின்றது. அது பங்குனியாறு என்றும், அமலையாறு என்றும் சொல்வர்.

கோயிலுக்கு எதிரில் மிக உக்கிரதேவதைகளான தேரடிக் கருப்பண்ணசாமியும், மதுரைவீரன் கோயிலும், அடைக்கலங்காத் தான் கோயிலும் இருக்கின்றன. பார்வதி, பிரமன், இலக்குமி, அகத்தியர் முதலியோர் வழிபட்டதலம். வைகாசி மாதம் பெருவிழா நடக்கும்.கல்வெட்டு:

1891ஆம் ஆண்டில் எடுக்கப்பெற்ற 34 எண்ணுள்ள கல் வெட்டு ஒன்றுள்ளது. ஏனைய எடுக்கப்பெறவில்லை போலும். இது ஹொய்ஸள மன்னன் வீரசோமேஸ்வரன் காலத்தது. இதனால் இக் கோயிலுக்குப் பதினாயிரங்கலம் அரிசி கிடைத்ததாகத் தெரிகின்றது. இவன் கி.பி. 1253 இல் சமயபுரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தான். சோழ அரசர்களில் குலோத்துங்கன் விளக்கு எரிக்க நிபந்தம் அளித்திருக்கிறான்.

 
 
சிற்பி சிற்பி