பருப்பதம் (சிறீசைலம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பருப்பத நாயகி உடனுறை பருப்பத நாயகர்


குளம்: பர்வததீர்த்தம்

பதிகங்கள்: சுடுமணி -1 -118 திருஞானசம்பந்தர்
கன்றினார்புரங்கள் -4 -58 திருநாவுக்கரசர்
மானும்மரை -7 -79 சுந்தரர்

முகவரி: சிறீ சைலம்
கர்ணூல் மாவட்டம்
ஆந்திர மாநிலம் 518100
தொபே. 08524 287130

ஆந்திர மாநிலத்திலுள்ளது. வடநாட்டுத்தலம் ஐந்தனுள் ஒன்று. சென்னையிலிருந்து நந்தியால் வரை புகைவண்டியில் சென்று ஆத்மகூர் வழியாகப் பேருந்தில் செல்லலாம். சென்னையிலிருந்து ஆந்திர மாநிலப் பேருந்து நேரே ஸ்ரீசைலம் (திருப்பருப்பதம்) செல்கிறது.

இத்தலம் பன்னிரு சோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. மல்லிகார்ச்சுனம் எனப் பெயர் பெறுவது. இத்தலம் திருப்பருப்பதம் எனவும், ஸ்ரீசைலம் எனவும் வழங்கும். அருச்சுனகே்ஷத்திரங்கள் மூன்றனுள் இது ஒன்று. திருநந்திதேவர் இறைவனைத் தாங்க மலையுருவாகத் தவஞ்செய்த தலம். இத்தலத்திற்குச் செல்லும்வழி மிகக் கடினமானது. இதனைச் சுந்தரமூர்த்தி தேவாரம் `செல்லல் உறவரிய சீபருப்பதமலை` என்று எடுத்துக் காட்டுகிறது. சுவாமி பருப்பத நாயகர். இறைவி பருப்பத நாயகி. தீர்த்தம் பர்வததீர்த்தம்.கல்வெட்டு:

விஜயநகர அரசனான வீரப்பிரதாப வீரநரசிங்கராயன் இங்கு வந்து வழிபட்டிருக்கிறான். ஒரு பருவதையன் என்பானும் அவன் மனைவியும் இங்குவந்து `சித்தபுரம்` என்னுமிடத்தில் ஒரு குளம் வெட்டி நந்தவனம் அமைத்தனர். கிருஷ்ணதேவராயனுடைய மந்திரியான சந்திரசேகர அமாத்யா என்பவன் கல்யாண மண்டபத்தைக் கட்டிப் பொற்கலசம் ஸ்தாபித்தான். மல்லிகார்ச்சுன கோயிலுக்கு முன் புறத்தில் ஒருமண்டபங் கட்டினான். நந்தீசுவரத்திற்கும், பிருங்கீசு வரத்திற்கும் பொன்னாலேயே திருவுரு அமைத்துக் கொடுத்தான். அந்த மண்டபத்தில் தமராசா என்பவன் கிருஷ்ணதேவராயர் சந்திர சேகர அமாத்யா இவர்களுடைய கற்சிலைகளை அமைத்தான். கோயில் செலவுகளுக்காகச் சிவபுரம் என்னும் ஊரைத் தானமாக வழங்கினான். பொற்கிண்ணமும், வெள்ளிப்பீடமும் அளித்தான். நந்தியைப் பிரதிஷ்டைசெய்து அதற்கு முன்பக்கத்தில் பொற்றூண் ஒன்றை நிறுவினான். வீரப்பிரதாப அச்சுதராயன் காலத்தில் மல்லப்ப நாயுடு என்பவன் பிரமராம்பா அம்மைக்கு ஒரு மணியும் சரிகையாடையும் அளித்தான்.

விஜயராயமகாராயன் மகளும், பாண்டிய பெருமாள் தேவனின் மனைவியுமாகிய லெட்சம்மாள்ஜிஆயி என்பவள் தினசரி ஐந்து ஜங்கமர்களுக்கு உணவளிக்க நிலம் வழங்கினாள். சாளுவ அரசனான பதமல்லப்பன் ஒருகுளம் வெட்டியிருக்கிறான். காகதீய அரசனான பிரதாபருத்திரதேவ மகாராஜர் காலத்தில் அவனுடைய முதல் மந்திரி உச்சிக்கால வழிபாட்டிற்காக கமநாட்டில் நிலம் வழங்கியிருக்கிறார். ஜனமாதா மண்டபத்திற்கருகில் ஒரு கோயிலையும் கட்டியிருக்கிறார். அன்னப்பஐயன் என்பவன் மல்லி கார்சுனதேவர்க்கும் பிரமராம்பா தேவிக்கும் நைவேத்திய நிபந்தங்களை அளித்ததோடு முகமண்டபங்கட்டுவித்தான். தென்னண்டை மதில் பிராகாரத்தைப் பழுதுபார்த்தான். இரும்புத் தூண்களை நிறுத்தித் தெற்குக் கோபுரத்தையும் பழுதுபார்த்தான். பயிராகிஸந்தகி என்பவன் தன் மனைவியின் பெயரால் பூந்தோட்டத்திற்கு நிலம் அளித்துள்ளான். இவையன்றி நந்திநாதர், பிருங்கிநாதர் முதலியவர்களை வழிபடுகிறவர்களுக்கு வீடுகள் கட்டி அளித்த செய்தியும், செங்கையன் என் பார் சந்தனக்கல் வைத்ததும் அறியப்பெறுகின்றன. பிரதான கங்கைக்கு இரண்டாம் விதரிகரனின் மனைவியான கடம்பவித்தலம்பா படிக்கட்டு கட்டினாள். வித்தலேசுவரருக்கு ஒரு உருவச்சிலை வழங்கினாள். இந்தத் தருமங்களைச் செய்ய இறைவன் அவளுக்குக் கனவில்வந்து அருளியதாகக் குறிப்பிடுகிறாள். மேலும் சந்திரசேகரன் வீரபத்திர தேவர் கோபுரத்தையும் , தூண்களையும், பொற்கலசங்களையும் அமைத்திருக்கிறான். உதயகிரி அப்பனையங்காரு நந்தித் தூணிலிருந்து துர்க்காதேவிகோயில் வரையில் படிக்கட்டுகளைக் கட்டுவித்தான். கொண்டபட்டி என்பவன் கோயில் முழுமையும் புதுப்பித்திருக்கிறான். இவையன்றிப் பல அன்பர்கள் பொற்றூண்கள் அமைத்தும், படிக்கட்டமைத்தும், முகமண்டபங்கட்டியும் பணிசெய்தார்கள் என்று தெரிகிறது.

 
 
சிற்பி சிற்பி