பராய்த்துறை (திருப்பராய்த்துறை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு மயிலம்மையார் உடனுறை பராய்த்துறை நாதர்


மரம்: பராய்
குளம்: காவிரி

பதிகங்கள்: நீறுசேர்வ -1 -135 திருஞானசம்பந்தர்
கரப்பர் -5 -30 திருநாவுக்கரசர்

முகவரி: திருப்பராயத்துறை அஞ்சல்
கரூர் மாவட்டம், 639115
தொபே. 0431 2614063

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். திருச்சிராப்பள்ளியிலிருந்து குளித்தலை செல்லும் பேருந்து வழியில் உள்ளது. இத்தலம் இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் இவர்களால் பூசிக்கப்பெற்றது. அகண்ட காவிரித்துறையில் உள்ளது. இதனை அப்பர் சுவாமிகள் `பரக்குநீர்ப் பொன்னி மன்னுபராய்த் துறை` என்று அருளுவார்கள். இறைவன் பெயர் பராய்த்துறை நாதர். தேவியார் பெயர் மயிலம்மை யார், தீர்த்தம் காவிரி. விருட்சம் பராய். விருட்சத்தால் இத்தலத்திற்குப் பெயராயிற்று. திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் இரயில் நிலையம் உள்ளது.கல்வெட்டு:

மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மரான முதற்பராந்தகன் காலத்திய கல்வெட்டுக்கள் மிகுதியாக உள்ளன. இன்னாரது என் றறியமுடியாத இராஜகேசரிவர்மன் காலத்திய கல்வெட்டுக்களும் சில உள்ளன. அவையன்றிச் சுந்தரபாண்டியத்தேவர், கோநேரின்மை கொண்டான். கிருஷ்ணதேவ மகாராயர் கல்வெட்டுக்களும் இன்னாரென்று அறியமுடியாத சில கல்வெட்டுக்களும் உள்ளன. எல்லாமாக அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 83. அவற்றால் அறியப்படும் கோயிலைப்பற்றிய உண்மைகள், கோயிலுக்கு விளக்கு எரிக்க ஆடும், பொன்னும், நிலமும் அளித்த செய்திகளாகும்.

சுந்தரபாண்டியத் தேவன் தன்னுடைய ஆட்சி ஒன்பதாம் ஆண்டில் தங்க ஆபரணங்கள் அளித்தான்(267 of 1903). குலோத்துங்கன் கருப்பக் கிருகத்துக்குப் பொன்வேய்ந்தான்(268 of 1903). சோமாஸ்கந்தர் கோயில் முன் மண்டபம், சிறைமீட்டான் திரிவிக்ரம உதயனால் கட்டப்பெற்றது(280 of 1903). தலவிநாயகருக்கு ஏகாம்பர உதயன் ஆட்சியில் நிலம் வழங்கப் பெற்றது(282 of 1903). இறைவன் திருப்பராய்த்துறை மகாதேவர், பராய்த்துறை பரமேசுவரன்(570 of 1903, 566 of 1903). என்று வழங்கப்பெறுகிறார். இத்தலம் உத்தமசீலிச் சதுர்வேதி மங்கலத்துத் திருப்பராய்த்துறை என்று குறிக்கப்படுகிறது. இங்கே தக்ஷிணாயன புண்ணிய காலத்திலும் சங்கராந்தியிலும் நீராட்டு விழா நடைபெற்றதாகத் தெரிகின்றது.

 
 
சிற்பி சிற்பி