ஆடானை (திருவாடானை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு அம்பாயிரவல்லி உடனுறை ஆடானை நாதர்


மரம்: வில்வம்
குளம்: சூரிய தீர்த்தம்

பதிகம்: மாதோர்கூறுகந்து -2 -112 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவாடானை அஞ்சல்,
திருவாடானை வட்டம்,
இராமநாதபுரம் மாவட்டம், 623407
தொபே. 04561 254533

தேவகோட்டை சாலை தொடர்வண்டி நிலையத்திற்குத் தென் கிழக்கே 35 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது.

காளையார்கோயிலில் (திருக்கானப்பேர்) இருந்தும் தேவ கோட்டையிலிருந்தும் திருவாடானை செல்லப் பேருந்துகள் உள்ளன. பேருந்துகளில் வருவதே எளிதானதாகும். இது பாண்டிநாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று.

ஆட்டுத் தலையும் யானை உடலுமாகச் சபிக்கப்பெற்ற பிருகு முனிவர், அவ்வுருவத்துடன் வந்து வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்ற தலமாதலின் இப்பெயர் பெற்றது.

இறைவரின் திருப்பெயர் ஆதிரத்தினேசுவரர். ஆடானை நாதர் என்ற வேறுபெயரும் உண்டு. இறைவியாரின் திருப்பெயர் அம்பாயிரவல்லி. திருக்கோயிலையொட்டி நான்கு மாடவீதிகள் இருக்கின்றன.சூரியதீர்த்தம். திருக்கோயிலின் வடகிழக்கிலுள்ளது.

நீலமணியைச் சிவலிங்கமாகத்தாபித்து, சூரியன் வழி பாடாற்றிப் பேறுபெற்றான். இதற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது.

கமலைஞானப்பிரகாச தேசிகர் மாணாக்கர் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பெற்ற தலபுராணம் அச்சில் வெளிவந்துள்ளது. தூணுகுடி குருசுப்பிரமணியக் குருக்கள் பண்டாரம் அவர்களால் இயற்றப்பெற்ற பதிகமும் அச்சில் உள்ளது.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் பதினேழாம் ஆட்சியாண்டிலும், மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பதினாறாம் ஆட்சியாண்டிலும், பொறிக்கப் பெற்ற இரண்டு கல்வெட்டுக்களும், சகம் 1557 இல் பொறிக்கப்பெற்ற ஒரு கல்வெட்டும், ஆண்டு குறிக்காத மற்றொரு கல்வெட்டுமாக நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1914, No. 433-436. (Ramnad District, Adani Taluk)).

இவைகளுள் இறைவன்பெயர் ஆடானைநாயனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது. இவைகள் இறைவனுக்கு நிலம் கொடுத்துள்ள செய்திகளைக் குறிப்பிடுகின்றன.

 
 
சிற்பி சிற்பி