நெல்வேலி (திருநெல்வேலி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு காந்திமதியம்மை உடனுறை நெல்லையப்பர்


மரம்: மூங்கில்
குளம்: தாமிரவருணி

பதிகம்: மருந்தவை -3 -92 திருஞானசம்பந்தர்

முகவரி: திருநெல்வேலி அஞ்சல்
திருநெல்வேலி மாவட்டம், 627001
தொபே. 0462 2339910

வேதசருமர் என்னும் அந்தணர் இறைவனுக்குத் திருவமுதுக்காக வைத்தருந்த நெல்லை வெள்ளங்கொள்ளாதவாறு வேலியிட்டுக் காத்தமையால் நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டது. திருநெல்வேலி தொடர் வண்டி நிலையத்திலிருந்து மேற்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது பாண்டிநாட்டுத் தேவாரம்பெற்ற பதிகளுள் பதினான்காவது. இதற்கு வேணுவனம் என்னும் வேறு பெயரும் உண்டு. இறைவன் மூங்கில் புதரிலிருந்து தோன்றிய காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டது என்பர்.

இறைவர் திருப்பெயர் 1. நெல்லையப்பர். `நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்` என்னும் வழக்கு இதை உறுதிப்படுத்தும். 2. வேணு நாதர். இறைவி திருப்பெயர் காந்திமதியம்மை. தீர்த்தம் தாமிரவருணி. துறை சிந்துபூந்துறை. சிந்திய எலும்புகள் பூக்கள் ஆயின என்பது வரலாறு. ஐம்பெருஞ் சபைகளுள் இது தாமிரசபை. பிரமதேவர், திருமால், அகத்தியர் வ்ழிபட்டுப் பேறுபெற்ற தலம். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. தலபுராணம் அச்சிட்டு வெளியிடப் பெற்றுள்ளது.

இத்தலத்தைப்பற்றி ``பொருநைத் துறைவாய்ப் பிறவாக்கடவுள் வேய்வயிற்றிற் பிறந்த தொன்னகரும்`` எனத் திருவிளையாடற் புராணம் அருச்சனைப் படலத்திலும் கூறப் பெற்றுள்ளது.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி