நெல்வெண்ணெய்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு நீலமலர்க்கண்ணி உடனுறை வெண்ணெயப்பர்


மரம்: வில்வம்
குளம்: பெண்ணையாறு

பதிகம்: நல்வெணெய் -3 -96 திருஞானசம்பந்தர்

முகவரி: நெய்வெணை கிராமம்
கூவாடு அஞ்சல்
இறையூர்
உளுந்தூர்ப்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 607201
தொபே. 04149 209097

நெய்வெண்ணெய் என மக்களால் இது வழங்கப் பெறு கின்றது. உளுந்தூர்ப்பேட்டை தொடர் வண்டி நிலையத்திற்கு வட மேற்கே 6 கி.மீ. தூரத்திலிருக்கிறது. இது நடுநாட்டுத் தலம்.

இறைவரின் திருப்பெயர் வெண்ணெயப்பர். இறைவியின் திருப்பெயர் நீலமலர்க்கண்ணி. தீர்த்தம் பெண்ணையாறு, சநகாதியர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.
கல்வெட்டு:

இவ்வூர்க் கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன் இவர்கள் காலங்களிலும், பல்லவமன்னரில் சகலபுவனசக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கதேவர், விசயநகர பரம்பரையில் வீரப்பிரதாபகிருட்டிணதேவ மகாராயர் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக் கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் `பொற்குடங் கொடுத் தருளிய நாயனார்` என்னும் பெயரால் குறிக்கப்பெற்றுள்ளனர்.

கூத்தாடுந்தேவர் திருமேனியை எழுந்தருளுவித்தவர்:

இத்திருக்கோயிலில் கூத்தாடுந் தேவரை (நடராசப் பெரு மானை) எழுந்தருளுவித்தவர் கங்கைகொண்ட சோழவள நாட்டுத் திருமுனைப்பாடிநாட்டுக் கீழையூரில் இருந்த இராஜேந்திர சோழசேதி ராயர் ஆவர். அத்திருமேனி எழுந்தருளுவிக்கப்பெற்ற காலம் முதற் குலோத்துங்கசோழதேவரின் நாற்பத்தெட்டாம் ஆண்டாகும். இக் கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் மிலாடு ஆகிய சனனாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்திற்கு உட்பட்ட ஊராகக் குறிக்கப் பெற்றுள்ளது.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1908 No. 370-381.)

 
 
சிற்பி சிற்பி