நெல்லிக்கா
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு மங்களநாயகி உடனுறை நெல்லிவனநாதர்


மரம்: நெல்லி
குளம்: பிரமதீர்த்தம், சூரியதீர்த்தம்

பதிகம்: அறத்தாலுயிர் -2 -19 திருஞானசம்பந்தர்

முகவரி: திருநெல்லிக்கா அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610205

நெல்லிமரத்தைத் தலமரமாகக் கொண்டதால் இப்பெயர் பெற்றது. நெல்லிமரம் பிராகாரத்தில் இருக்கின்றது.

திருநெல்லிக்கா தொடர்வண்டி நிலையத்திலிருந்து மேற்கே அரை கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள நூற்றுப்பதினேழாவது தலமாகும். திருவாரூரிலிருந்து இவ்வூருக்கு நகரப் பேருந்துகள் உள்ளன.தலமரம் நெல்லி.

ஞாயிறும் பிரமனும் வழிபட்ட தலம். ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும், மாசிமாதம் 18உ ஏழுநாளும் அஸ்தமன சமயத்தில் சூரியனுடைய கிரணங்கள் இறைவனது திருமேனியில் விழுகின்றன. இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.கல்வெட்டு:

கோயிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டிருக் கின்றன. அவைகளுள் ஏழு இரண்டாம் இராஜராஜனுடையனவும் ஒன்று வீரராஜேந்திரனுடையதும் ஆகும். கல் வெட்டுக்களில் ரொக்கம், நிலதானம், விளக்குக்காக நிலதானம் என்பவைகளே குறிக்கப் பெற்றுள்ளன.

கடவுள் பெயர் திருநெல்லிக்காவுடையார். கூற்றம் - ஆர்வலக்கூற்றம். நாடு - இராஜேந்திர சோழ வளநாடு என்பதாம். வேறு செய்திகள் தெரியவில்லை. பண்டைக் காலத்தில் இவ்விடம் நெல்லி மரக் காடாக இருந்தது எனப் பெயரே விளக்குகின்றது.

 
 
சிற்பி சிற்பி