நெடுங்களம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு ஒப்பிலாநாயகி உடனுறை நித்தியசுந்தரர்


மரம்: விலவம்
குளம்: சுந்தர தீர்த்தம்

பதிகம்: மறையுடையாய் -1 -52 திருஞானசம்பந்தர்

முகவரி: திருநெடுங்களம் அஞ்சல்
திருச்சி வட்டம்
திருச்சி மாவட்டம், 620015
தொபே. 0431 2520126

சோழநாட்டுக் காவிரிதென்கரைத்தலம். திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே உள்ளது. பேருந்து வசதி உள்ளது தஞ்சை - திருச்சி பேருந்து வழியில் துவாக்குடி வந்து அங்கிருந்து வடக்கே செல்ல வேண்டும்.

திருநெட்டான்குளம் என இக்காலத்து வழங்கும். வங்கிய சோழன் பூசித்துப் பேறுபெற்ற தலம். சுவாமி நித்தியசுந்தரர். தேவி ஒப்பிலாநாயகி, தீர்த்தம் சுந்தரதீர்த்தம்.கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் 34 உள்ளன. அவை சுந்தரபாண்டியன் காலத்தன மூன்றும், கரிகாலன் காலத்தது ஒன்றும், ஸ்ரீவல்லபதேவனது ஒன்றும் , இராஜகேசரிவர்மன் காலத்தன ஒன்பதும், 3 ஆம் இராஜராஜன் கல்வெட்டு இரண்டும், ஹொய்ஸள வீரராமநாத தேவரது ஒன்றும், திரிபுவன வீரதேவனுடையன இரண்டும், பரகேசரி வர்மனென்று மட்டும் குறிப்பன மூன்றும், விஜயநகர அரசர்களுடை யன ஐந்தும், நாயக்க மன்னரது ஒன்றும் ஏனைய அறியப்படாதனவுமாக அமைந்தன.

இத்தலம் சுந்தரபாண்டியன் காலத்து பாண்டிய குலபதி வடகரைநாட்டுத் திருநெடுங்களம் என்றும்(627 of 1909.), இராஜராஜ தேவன்III காலத்து பாண்டியகுலாசனி வளநாட்டு வடகாவிரிநாட்டுப் பிரமதேயம் தியாகவல்லி சதுர்வேதி மங்கலமான திருநெடுங்களம் என்றும் குறிக்கப்பெறுகிறது. இறைவன் திருநெடுங்களமுடைய நாயனார்(667 of 1909), நெடுங்களமுடையார், உலகாண்டேசுவரமுடையார்(679 of 1909), களந்தை நாயகர்(692 of 1909), திருநெடுங்களமுடைய தம்பிரானார்(693 of 1909), நிழலார் சோலை வளமுடையநாயனார்( 793 of 1909), திருநெடுங்களத்து ஆள்வார்(682 of 1909) என்றெல்லாம் வழங்கப்பெறுகிறார்.

இவ்வரசர்கள் அனைவரும் கோயிலுக்குப் பொன்னும், நெல்லும், நிலமும் அளித்த செய்தி அறிவிக்கப்பெறுகின்றன. அரசர் களேயன்றி, அரசருடைய தண்டல் நாயகர்களும், அரசகாரியம் பார்ப்பவர்களும், மனைவியார்களும் அறம் செய்துள்ளனர். இராஜ கேசரிவர்மன் மூன்றாமாண்டில் உறையூர் உடையான் ஒருவனால் லோகசுந்தரத் திருப்படிமம் பிரதிஷ்டை செய்யப்பெற்றது(682 of 1909), பிள்ளை யார் கணபதி கோயிலுக்கு விளக்கீடு செய்வித்தான் இராஜகேசரி வர்மன் I (கி.பி. 985-1013). பித்தளையால் செய்யப்பட்டு பொன்முலாம் பூசப்பெற்ற மத்தளி ஒன்றைக் கம்பன் மணியனான விக்கிரமசிங்கன் மூவேந்த வேளாளன் என்பான் ஸ்ரீபலி உபயத்திற் காகச் செய்து கொடுத்தான்(691 of 1909). இக்கோயிலில் முழுக்குடி அரசன் வல்லபதேவன் அரங்கமண்டபம் கட்டிக்கொடுத்தான்(692 of 1909).

 
 
சிற்பி சிற்பி