ஆக்கூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு வாள்நெடுங்கண்ணியம்மை உடனுறை தான்தோன்றியப்பர்

மரம்: சரக்கொன்றை
குளம்: குமுத தீர்த்தம்

பதிகங்கள்: அக்கிருந்த -2 -42 திருஞானசம்பந்தர்
முடித்தாமரை -6 -21 திருநாவுக்கரசர்

முகவரி: ஆக்கூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609301
தொபே. 04364 280005

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம்.
மயிலாடுதுறை - பொறையாறு பேருந்து வழியில் ஆக்கூர் உள்ளது. மயிலாடுதுறை சீர்காழி ஆகிய ஊர்களிலிருந்து நகரப் பேருந்துகளும் உள்ளன. பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆலயம் உள்ளது.

ஊரின் பெயர் ஆக்கூர் ஆயினும் அங்குள்ள கோயிலுக்குத் தான்தோன்றிமாடம் என்று பெயர். அதாவது தான்தோன்றியப்பர் (சுயம்புமூர்த்தியாகிய இறைவர்) எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில் என்று பொருள்படும்.

மாடக்கோயில் என்பது யானை ஏற முடியாதபடி படிக் கட்டுகள் வைத்துக் கட்டப்பெற்றதாகும். இத்தகைய கோயில்கள் கோச் செங்கணான் என்னும் சோழமன்னனால் கட்டப்பெற்றன என்பர்.

இறைவரின் திருப்பெயர் தான்தோன்றியப்பர். வடமொழியில் சுயம்புநாதர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் வாணெடுங் கண்ணியம்மை. வடமொழியில் கட்கநேத்திரி.

அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சிறப்புலி நாயனார் வாழ்ந்த பதி. இத்தலத்து வேளாளர்களைத் திருஞான சம்பந்தப்பெருந்தகையார் இவ்வூர்ப் பதிகத்தில்,

``வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
தாளாள ராக்கூரிற் றான்றோன்றி மாடமே``
எனச் சிறப்பித்திருப்பது பெருமகிழ்ச்சியைத் தருவதாகும்.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில், சோழ மன்னர்களில் இரண்டாம் இராஜாதிராஜன், திருபுவனச் சக்கிரவர்த்தி இராஜராஜ தேவன், இவர்கள் காலங்களிலும், பல்லவமன்னருள், கோப்பெருஞ் சிங்கன் காலத்திலும், விசயநகர பரம்பரையில் வீர கிருஷ்ண தேவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.(See the Annual Reports on South Indian Epigraphy for the year ending 31st March 1925, No. 224-229. குறிப்பு: 230-231 பெருமாள் கோயிலைப்பற்றியதாகும்.) இவைகளுள் சிவபெருமான், திருத்தான்தோன்றி மாட முடையார் என்னும் பெயரால் வழங்கப்படுகின்றனர்.

ஆக்கூர், இராஜேந்திரசோழ சதுர்வேதி மங்கலத்திற்கு உட்பட்டிருந்தது. ஊர் அலுவல்களைப் பெருங்குடி மக்கள் கவனித்து வந்தனர். இவர்கள் கூட்டப் பெருமக்கள் எனவும் திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராசஜதேவரின் பதினெட்டாம் ஆண்டுக் கல்வெட்டில் கூறப்பெறுகின்றனர்.

இத் திருக்கோயிலில் வைகாசி மாதத்தில் திருவிழா நடந்து வந்தது. விழாமுடிவில் பெருமான் தீர்த்தமாடுதற்குக் காவிரிக்கு எழுந்தருளுவது உண்டு.

இங்ஙனம் எழுந்தருளுவதற்குப் பெருவழி இன்மையால் அதைப் புதிதாக அமைக்க வேண்டுமென்று கும்ப ஞாயிறு முதல் ஊர்க்காரியங்களைக் கவனிக்கும் கூட்டப் பெருமக்கள் ஏற்பாடு செய்ததை ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.

அழகிய பல்லவர் அரையராகிய வீரப்பிரதாபர், ஹொய்சலர் களைச் சிறையிலடைத்தும், பாண்டிய மன்னரிடம் கப்பம் வாங்கியும், சோழநாட்டிற் புகுந்து காவிரித் தென்கரை வழியாகக் கிழக்கே சென்று, பாடல் பெற்ற தலங்களை வணங்கி. அவைகளுக்கு இறையிலி நிலங்கள் அளித்தும், பழுதுற்ற கோயில்களைப் புதுப்பித்தும் வந்தார்.

அவர் ஜெயங்கொண்ட சோழவழ நாட்டில் ஓர் ஊரில் தங்கி யிருந்தபோது, ஆக்கூர் முதலான ஊர்களில் அதிக வரிகளால், குடிகள் நிலத்தைப் பயிரிடாமல் இருந்தார்கள். சிலர் வெளியேறி விட்டனர். இவர்களை எல்லாம் அழைத்து, வரிகளைக் குறைத்து, நிலத்தை உழச் செய்தார். இதை ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது.

 
 
சிற்பி சிற்பி