நன்னிலத்துப்பெருங்கோயில்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பிரகேசுவரி உடனுறை பிரகேசுரர்


மரம்: வில்வம்
குளம்: பிரம தீர்த்தம்

பதிகம்: தண்ணியல் -7 -98 சுந்தரர்

முகவரி: நன்னிலம் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610105
தொபே. 9442682346

நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் இருக்கின்றது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்குச் செல்லும் இருப்புப் பாதையில் உள்ள நன்னிலம் தொடர்வண்டி நிலையத்துக்கு மேற்கே சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்குள்ள கோயில் பெருங்கோயில் அல்லது மாடக்கோயில் அமைப்புள்ளது. யானை ஏற முடியாதபடி படிகள் அமைத்துக் கட்டப்பட்ட கோயில்கள் பெருங்கோயில் எனப்படும். இக்கோயில் கோச்செங்கட் சோழரால் கட்டப்பட்டது. இச்செய்தி,

``கோடுயர் வெங்களிற்றுத்திகழ் கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனை``
என்னும் இவ்வூர்ப்பதிகம் 11 ஆம் திருப்பாட்டில் உள்ள முதல் இரண்டு அடிகளால் பெறப்படுகின்றது. இக்கோயில் முற்றிலும் செங்கல்திருப் பணியை உடையது.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி