நல்லம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு மங்களநாயகி உடனுறை உமாமகேசுவரர்


மரம்: அரச மரம்
குளம்: சக்திதீர்த்தம்

பதிகங்கள்: கல்லானிழன்மே -1 -85 திருஞானசம்பந்தர்
கொல்லத் -5 -43 திருநாவுக்கரசர்

முகவரி: கோனேரிராசபுரம்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612201
தொபே. 0435 2449800

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். கும்பகோணம் வடமட்டம் பேருந்துகளில் செல்லலாம். இத்தலம் கோநேரிஇராஜபுரம் என வழங்கும். இத்தலத்தில் நடராசருடைய விக்ரகம் மிகப் பெரியதாகவும், அழகாகவும் இருக்கிறது. சுவாமி உமாமகேசுவரர்; அம்மை மங்களநாயகி; தீர்த்தம் சக்திதீர்த்தம்.கல்வெட்டு:

இக்கோயிலை மதுராந்தகதேவனான உத்தமசோழன் தாயும் கண்டராதித்தன் மனைவியுமான செம்பியன்மாதேவியார் கருங்கற் பணியாகக் கட்டினாள்(450 of 1908). இறைவன் திருநல்லமுடையார், திருநல்ல முடையமகாதேவர் என(628 of 1909)வழங்கப்பெறுவர்(450, 624 of 1908), இராஜகேசரிவர்மனான இராஜராஜன் காலத்தில் கோயிலில் திருப்பதிகம் ஓத இருவரால் பூங்குடி கிராமத்தில் நிலம் விடப்பெற்றது(624 of 1909). உடையபிராட்டியார் உத்தரவின் படி சாத்தன் குணபட்டனான அரசாணசேகரனால் கோயில் கட்டப் பெற்றது(626 of 1909). இராஜராஜன் காலத்தில் தெரிஞ்ச கைக்கோளர்களில் ஒருவனான நக்கன் நள்ளாற்றடிகளால் கடவுளின் வெள்ளி விக்ரகம் ஒன்றும், சண்டேசுவரர் செப்புவிக்ரகமும் செய்விக்கப்பெற்றன. இன்னாரது என்று அறியப்பெறாத கல்வெட்டு ஒன்று செம்பியன்மா தேவி கண்டராதித்தன் பெயரால் இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்தான் என்கின்றது(635 of 1909). இங்கே கைலாசமுடையமகாதேவர்(653 of 1909). ஆதித்தேசுவரமுடைய மகாதேவர்(644 of 1909), கோயில்களும் தனித்து இருந்தனவாக அறியப்படுகின்றன. உத்தமசோழ விண்ணகரம் என்ற விஷ்ணு ஆலயமும் குறிக்கப்பெறுகின்றது(655 of 1909).

இவையன்றித் திருநல்லமுடையார்கோயில் தெற்குப் பக்கத்துப் பிராகாரத்தில் புகழாபரண மண்டபம் என்ற ஒன்று இருந்த தாகவும், அதில் பிள்ளையாரைப் பிரதிட்டைசெய்யக் குலோத்துங்கன் IIIகாலத்தில் நிலம் அளிக்கப்பெற்றது என்றும் வரலாறு விளக்கு கின்றது(662 of 1909). திட்டைவிழுமியான்பிள்ளையடியாரால் சண்டேசுவரர் கோயில் திருப்பணி செய்விக்கப் பெற்றது(658 of 1909). ஆதனூர் விஜயநட்டரைய னான அருமொழித் தேவனால் திருநடைமாளிகை கட்டப்பெற்றது.

ஏனைய கல்வெட்டுக்கள் திருமஞ்சனத்திற்கும், பூமாலைக்கும், நந்தவனத்திற்கும், அமுதுக்கும், விளக்கிற்கும் செய்த பணிகளை அறிவிப்பன. இத்தலத்தால் தெரியும் அரசர்களும், தண்டத் தலைவர்களும், அரசகாரியம் பார்ப்பாரும், வெற்றிக் குறிப்புக்களும் பல.

 
 
சிற்பி சிற்பி