தேவூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு மதுரபாடணியம்மை உடனுறை தேவகுருநாதர்


மரம்: வாழை
குளம்: தேவ தீர்த்தம்

பதிகங்கள்: பண்ணிலாவிய -2 -82 திருஞானசம்பந்தர்
காடுபயில் -3 -74 திருஞானசம்பந்தர்

முகவரி: தேவூர் அஞ்சல்
கீவளூர் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 611109
தொபே. 04366 276113

தேவர்கள் பூசித்துப் பேறுபெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.

இது கீழ்வேளூர் தொடர்வண்டி நிலையத்திற்குத் தெற்கே 2.5கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவாரூரிலிருந்து வலிவலம் செல்லும் நகரப் பேருந்தில் செல்லலாம்.

காவிரித் தென்கரையில் உள்ள எண்பத்தைந்தாவது தலம். இறைவரது திருப்பெயர் தேவகுருநாதர். இறைவியாரது திருப் பெயர் மதுரபாடணியம்மை. தீர்த்தம் தேவதீர்த்தம். தலமரம் வாழை. இந்திரன், குபேரன், வியாழன் முதலியோர் பூசித்த தலம். கௌதம முனிவரும் பூசித்தார். மாடக்கோயில் அமைப்புடையது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகங்கள் இரண்டு இருக்கின்றன.கல்வெட்டு:

இரண்டு கல்வெட்டுக்கள்(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1905, No. 518-519.) கிடைத்துள்ளன. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் (27-10-1287) கோயி லுக்குப் பூதானம் செய்யப்பட்டது. அருண்மொழி சோழ வளநாட்டுத் தேவூர் நாட்டு தேவூர் ஆதித்தீசுவரமுடையார் என்று சொல்லியிருக்கிறது. விஜயநகர அரசன் தேவராயன் II கி.பி. 1347 சகம் 4425 தேதியிட்ட கல்வெட்டு அரைகுறையாக இருக்கிறது.

இத்திருக்கோயிலில் ஜடாவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவரின் பதினொன்றாம் ஆட்சி ஆண்டிலும் விஐயநகர பரம்பரையைச் சேர்ந்த தேவராயமகாராஜரின் (சகம் 1347 இல் பொறிக்கப்பெற்ற) காலத்திலும் பொறிக்கப்பெற்ற இரு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவைகளுள் பாண்டியன் காலத்துக்கல்வெட்டில் இத்தேவூர் அருண்மொழித் தேவவளநாட்டுத் தேவூர்நாட்டுத் தேவூர் எனக் குறிக்கப்பெற்றிருப்பதால் இத்தேவூர் நாட்டின் தலைநகராய் இருந்தது என்று பெறப்படுகின்றது.

இறைவர் ஆதித்தேச்சரமுடையார் என்னும் பெயரினர். விஜயநகர பரம்பரையைச் சேர்ந்த புக்கண்ண உடையார் தேவர்கள் நாயன் எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ளனர்.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1905, No. 518-519.)

 
 
சிற்பி சிற்பி