தென்குடித்திட்டை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு உலகநாயகி உடனுறை பசுபதிநாதர்


மரம்: வில்வம்
குளம்: பசு தீர்த்தம்

பதிகம்: முன்னைநான் -3 -35 திருஞானசம்பந்தர்

முகவரி: பசுபதிகோயில் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம், 614206
தொபே. 04362 252858

இது இக்காலம் திட்டை என்று வழங்கப்பெறுகின்றது. இது கும்பகோணம் - தஞ்சாவூர் இருப்புப் பாதையில் திட்டை தொடர் வண்டி நிலையத்திற்கு மேற்கே 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

இறைவன் திருப்பெயர் பசுபதிநாதர். இறைவியின் திருப் பெயர் உலகநாயகி. காமதேனு, ஆதிசேடன், வசிட்டர் முதலானோர் பூசித்துப் பேறுபெற்ற தலம். இதற்கு ஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று இருக்கின்றது.கல்வெட்டு:

இவ்வூர்க் கோயிலில் பாண்டியர்களில் மாறவர்மன் திரி புவனச்சக்கிரவர்த்தி குலசேகரதேவர் காலத்திலும், சாளுவ பரம்பரையில் நரசிம்மராயன் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. கல்வெட்டு அறிக்கையில்(``Another stray stone uilt into the same wall which is in modern characters states that Timai elongs to the (God) Teranar``),திட்டைக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் பெயர் தேறனார் என்று பெறப்படுகின்றது. ஆண்டு அறிக்கை கூறுவது தவறுடையதாகும். ஞானசம்பந்தர் தேவாரத்தில் ஆறாம் திருப்பாட்டில் ``ஆறினார் பொய்யகத்தை யுணர்வெய்தி மெய்தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே`` என்ற அடிகளால் தேறினார் என்பது அடியார்களைக் குறிப்பிடுமேயல்லாது ஆண்டவனைக் குறிப்பிடாது. அது ஒரு துண்டுக் கல்வெட்டு. ஆதலால் அதைக் கொண்டும் முடிவுகட்டக் கூடாது. கர்ப்ப இல்லின் எதிரிலுள்ள மண்டபம் எதிரிலா வீரர், சத்துருகாலர் எனப் பாராட்டப்பெற்றவரும் பெருங்கோளூர் குலோத்துங்கசோழீச்சரமுடைய நாயனார் கோயிலின் பணியாளரு மாகிய ஒருவரால் கட்டப்பெற்றதாகும். அம்மண்டபத்தின் சுவர் சேதிராயரின் திருப்பணியையுடையது. அம்மன்கோயில் கல்வெட்டு நாச்சியார் கோயிலை முதலியப்ப முதலியார் பழுது பார்த்ததைக் குறிப்பிடுகின்றது.

அளிக்கப்பெற்ற நிவந்தங்கள்: தென்குடித்திட்டை இறைவர்க்கு தன் நட்சத்திரமாகிய ஆனி உத்தரட்டாதியில் அவனிராமன் சந்தி ஒன்றை நடத்துதற்குக் கண்டியூர் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் ஐந்து வேலி நிலத்தைக் கொடுத்துள்ளான். பெருங்கோளூர் ஊரவர் தங்கள் பாடிகாவல்வரியை இக்கோயிலைப்பழுதுபார்ப்பதற்குக் கொடுத்துள்ளனர்.

குறிப்பு: இவ்வூர்க் கல்வெட்டில்(See the Annual Reports on South Indian Epigrapy for the year 1934 No. 148, 149, 154.) `கண்டியூர் நாடு` என்ற ஒரு நாடு குறிப்பிடப்படுகின்றது. இங்குக் குறித்த கண்டியூர் தஞ்சையிலிருந்து திருவையாற்றிற்குப் போகும் பெருவழியில் உள்ள திருக்கண்டியூர் ஆகும். இவ்வூர் ஆர்க்காட்டுக் கூற்றத்துக்கு உட்பட்டிருந்நது.

பதினான்காம் நூற்றாண்டில் இக்கண்டியூரைத் தலைநகராகக் கொண்டு நாடு கண்டியூர்நாடு என்று வழங்கப்பெற்றிருந்ததை இக் கல்வெட்டுப் புலப்படுத்துகின்றது. அரசியலார் படியெடுத்துள்ள சோழநாட்டுக் கல்வெட்டுக்கள் அனைத்தும் வெளிவரின் `கம்பநாடு` என்ற நாடு உள்ளமையும் வெளியாகலாம்.(See the Annual Reports on South Indian Epigrapy for the year 1934 No. 148, 149, 154.)

 
 
சிற்பி சிற்பி