தெளிச்சேரி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு சத்தியம்மை உடனுறை பார்வதீசுவரர்


மரம்: வில்வம்
குளம்: பார்வதி தீர்த்தம்

பதிகம்: பூவலர்ந்தன -2 -3 திருஞானசம்பந்தர்

முகவரி: கோயிற்பற்று
காரைக்கால் அஞ்சல்
புதுவை மாநிலம் 609602
தொபே. 04368 228124

இது கோயில்பத்து என்று வழங்கப்பெறுகின்றது. இத்தலம் காரைக்காலுக்கு வடபால் உள்ளது. பொறையாறு - காரைக்கால் பேருந்து வழியில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள ஐம்பதாவது தலமாகும்.

இறைவரின் திருப்பெயர் பார்வதீசுவரர். இறைவியாரின் திருப்பெயர் சத்தியம்மை.

பங்குனி மாதத்தில் 13ƒ முதல் (7 நாள்) பத்து நாள்களுக்குச் சூரியபூசை நிகழ்வது. ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இவ்வூருக்கு அணிமையில் போதிமங்கை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூர், புத்தர்கள் வசிக்கப்பெற்றது. அதன் வழியாக ஞானசம்பந்தரது அடியார் திருக்கூட்டம் பரசமய கோளரி வந்தார் என்று முத்துச் சின்னங்களை ஊதிச் சென்றது. அதைப்பொறாத புத்தர்கள் தடுத்தனர். அப்பொழுது தேவாரத் திருமுறையெழுதும் சம்பந்த சரணாலயர் ``புத்தர் சமண்கழுக்கையர்`` என்று தொடங்கும் பஞ்சாட்சரப் பதிகத் திருப்பாட்டை ஓத, புத்தர்கள் தலைவனான புத்தநந்தி தலையில் இடிவிழுந்தது. உடனே அவன் இறந்து போனான். மீளவும்புத்தர்கள் சாரிபுத்தனைத் தலைவனாகக் கொண்டு வாது செய்யவந்தனர். சம்பந்தசரணாலயர் ஞானசம்பந்தர் முன்னிலையில் அவர்களை வாதில்வென்று சைவர் ஆக்கினார். கோயில் மேற்குச் சந்நிதி. கோயில் முழுதும் செட்டிமார்களால் புதுப்பிக்கப்பட்டது.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி