தெங்கூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பெரிய நாயகி உடனுறை வெள்ளிமலைநாதர்


மரம்: வில்வம்
குளம்: சிவகங்கை

பதிகம்: புரைசெய் -2 -93 திருஞானசம்பந்தர்

முகவரி: திருநெல்லிக்கா அஞ்சல்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610205
தொபே. 04369 237454

இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 116 - ஆவது ஆகும். இது திருநெல்லிக்காவிற்குத் தென்மேற்கில் சுமார் 4.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவாரூரிலிருந்து திருநெல்லிக்கா செல்லப் பேருந்துகள் உள்ளன.

ஊரின் பெயர் தெங்கூர் என்றே சம்பந்தர் தேவாரத்தில் காணப்படுகிறது. சுந்தரர் ஊர்த்தொகையில் தேங்கூர் என்று குறிப்பிட்டுள்ளார். ``நாங்கூருறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே`` என்பன அவர் வாக்கு.

இறைவரின் திருப்பெயர் வெள்ளிமலை நாதர். இவ்வூர்த் திருப்பதிகத்தில் ஒவ்வொரு திருப்பாடலிலும் ``வெள்ளியங் குன்ற மர்ந் தாரே`` என்று இறைவர் திருப்பெயரைக் குறிப்பிட்டுள்ளார் சம்பந்தர். இறைவியாரின் திருப்பெயர் பெரிய நாயகி.

திருமகளும். நவக்கோள்களும் பூசித்துப் பேறு எய்தினர். திருமகள் வழிபட்ட இலிங்கம், அத்திருமகள் சந்நிதிக்கு எதிரில் இருக்கின்றது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. நவக்கிரகங்கள் பூசித்த லிங்கங்கள் உண்டு. அம்பாள் கோயில் தனியாயுளது. அக்கோயில் தெற்குப்பார்த்தது. சுவாமி கோயிலுக்குத் தென்கிழக்குத் திக்கில் உள்ளது. அம்மன் உருவம் சிறியது. நவக்கிரகங்கள் பூசித்தன என்பதற்குப் பிரகாரத்தில் 9 லிங்கங்கள் இருக்கின்றன.கல்வெட்டு:

இவ்வூரில் ஐந்து கல்வெட்டுக்கள்(See the Annual reports on South Indian Epigraphy for the year 1905, No. 528 to 532.) படியெடுக்கப் பட்டன.

அவற்றில் சோழர்கட்கு 4ம், பாண்டியருக்கு 1ம் உள்ளன. சோழருடையவை எல்லாம் பிற்காலத்தவை (12-13 நூ.ஆ). அவை, இராஜராஜன் III, குலோத்துங்கள் III, இராஜேந்திரன் III என்போருடையன.

விளக்கிற்காக 4000 காசு தானம். கோயில் விளக்குக்கு எண்ணெய் தருவோர்க்குப் பூதானம் செய்யப்பட்டது. பாண்டியர் கல்வெட்டு மாறவர்மன் குலசேகரனுடையது. (கி.பி.1268 - 1308) நரசிங்கதேவர் மகன் மாவை சக்கரவர்த்தியின் பொருட்டு மாளவ சந்தி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வெட்டின்படி சுவாமி பெயர் திருவெள்ளியங்குன்றமுடையார் என்பதாம்.

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களுள் மூன்றாங் குலோத்துங்க சோழதேவர். திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவர், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திரசோழதேவர் இவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னர்களில் மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவரின் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில் இறைவர் வெள்ளையன்குன்ற முடையார் என்னும் திருப்பெயரால் கூறப்பெற்றுள்ளனர். மூன்றாங் குலோத்துங்கசோழதேவரின் முப்பதாம் ஆண்டுக் கல்வெட்டு ஒரு நுந்தாவிளக்கினுக்கு நாலாயிரம்காசு கொடுக்கப்பெற்றதையும், திருபுவனச்சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் இருபத்தைந்தாம் ஆண்டுக் கல்வெட்டு திருக்கோயிலுக்கு எண்ணெய் கொண்டுவந்து நாடோறும் கொடுப்பவர்களுக்கு நிலம் விடப்பெற்றதையும், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திரசோழனின் பன்னிரண்டாம் ஆண்டுக் கல்வெட்டு எண்ணெய் உற்பத்தி செய்வார்களுக்கு விதிக்கப் பெற்றிருந்த வரி நீக்கப்பெற்றதையும் குலசேகரதேவ பாண்டியரின் முப்பத்தொன்றாம் ஆண்டுக் கல்வெட்டு நரசிங்க தேவருடைய மகன் மாளவச்சக்கிரவர்த்தியின் பேரால் மாளவன்சந்தி நடத்துவதற்கு நிவந்தம் அளிக்கப் பெற்றதையும் குறிப்பிடுகின்றன.

 
 
சிற்பி சிற்பி