துறையூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பூங்கோதை நாயகி உடனுறை துறையூர்நாதர்


மரம்: கொன்றை
குளம்: பெண்ணையாறு

பதிகம்: மலையார்அரு -7 -13 சுந்தரர்

முகவரி: திருத்துறையூர் அஞ்சல்
பண்ருட்டி வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 607205
தொபே. 04142 248498

இவ்வூரை இக்காலம், மக்கள் திருத்தளூர் என்று வழங்குகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், கடலூரிலிருந்து விழுப்புரம் செல்லும் இருப்புப்பாதையில் திருத்தளூர் என்னும் தொடர்வண்டி நிலையத்துக்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார் திருவெண்ணெய் நல்லூரினின்று இங்கு எழுந்தருளி, தவநெறியைத் தரவேண்டுமென்று வேண்டியருளினார். சைவ சமய சந்தான ஆசார்யர்களில் ஒருவராகிய அருணந்தி சிவாசாரியார் திரு அவதாரஞ்செய்தருளிய பதியும் இதுவாகும். பீமன், சூரியன் இவர்கள் வழிபட்டுள்ளனர். திருக்கோயில் மேற்கு நோக்கிய சந்தியையுடையது.கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் விக்கிரமசோழ தேவர், `பூமேவி வளர` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழன், பரகேசரி வர்மன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன் இவர்கள் காலங்களிலும்; விசயநகர வேந்தர்களில் அச்சுததேவ மகாராயர், தேவராயர் மகனாகிய மல்லிகார்ச்சுன தேவர், வீரநரசிம்ம ராயர், கிருஷ்ணதேவ மகாராயர், நரசிங்க தேவ மகாராயர் இவர்கள் காலங்களிலும்; சம்புவராயரில், இராச நாராயணச் சம்புவராயன் காலத்திலும் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் உள்ளன.

இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் தவநெறி ஆளுடை யார் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளனர். இவ்வூர், சோழ மன்னர் கல்வெட்டுக்களில் ராஜ ராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருத்துறையூர் என்றும் ராஜ ராஜ வளநாட்டு, திருமுனைப்பாடி, கயப்பாக்கை நாட்டுத் திருத்துறையூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. விசயநகர வேந்தர் காலத்தில் ராஜாதிராஜவள நாட்டு, திருமுனைப் பாடி கயப்பாக்க நாட்டு, திருவதிச்சீமை திருத்துறையூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

அச்சுததேவ மகாராயர் காலத்தில் இராமபட்டர் ஐயன், அரசனின் பொருட்டு, குறட்டி என்னும் ஊரை, தவநெறி ஆளுடையார்க் கோயிலைப் பழுது பார்ப்பதற்கும், இறைவர்க்கு வழிபாட்டிற்குமாகக் கொடுத்துள்ளான். இக்கோயிலில் துவார பாலகர்களை எழுந்தருளுவித்தவர் கங்கைய மாணிக்கம் என்பவ ராவர். அவர்களுக்கு வழிபாட்டிற்காக, பெண்ணையாற்றின் வட கரையில் 500 குழி நிலத்தையும் இவர் கொடுத்துள்ளார். நரசிங்கதேவ ராயர், தம்முடைய அவசரம் அண்ணமராசர் மூலம், திருத்துறையூர் தவநெறி ஆளுடைய நாயனார், வீமேச்சரம் உடையார், இராசூர் உடையார் இவர்களுக்கும், இவ்வூர்ப்பற்றில் உள்ள வேறு கோயில்களுக்கும், மாதந்தோறும் மகநாளில் வழிபாட்டிற்கும், பல ஆண்டுகளாகக் கோயிலில் இடிந்து கிடந்த பகுதிகளைக் கட்டுவதற்கும் ஆக ஏற்பாடு செய்திருந்தார். வெண்குன்றக் கோட்டத்து, தெள்ளாற்று நாட்டுத் தெள்ளாறு என்னும் ஊரில் இருந்த சிவப் பிராமணன் ஒருவன் தவநெறி ஆளுடையார் கோயிலுக்குச் சந்தி விளக்கின்பொருட்டு நிவந்தம் செய்திருந்தான்.

திருத்துறையூர் என்னும் தலத்தை வீமன் பூசித் துள்ளான் என்று தலவரலாறு கூறுவதற்கு ஆதாரமாக, வீமேச்சரம் உடையார் என்னும் பெயருள்ள திருமேனி ஒன்று, நரசிங்க தேவ மகா ராயரின் விகுருதி, ஐப்பசி 12 ஆம் நாளில் ஏற்பட்ட கல்வெட்டுக் குறிப்பிடுவது பாராட்டத்தக்கது. இந்த விகுருதி வருஷம் சகம் 1393 அதாவது கி.பி. 1471 ஆகும். இந்த நரசிம்மவர்மன் திருத்துறையூரைச் சுற்றியுள்ள கிராமங்களைத் தவநெறி ஆளுடையார்க்குச் சர்வமான்யமாகக் கொடுத்தவன் ஆவன்.(A.R.E. 1925 - 26 Part II )

 
 
சிற்பி சிற்பி