திருந்துதேவன்குடி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு அருமருந்து அம்மை உடனுறை கற்கடேசுவரர்


மரம்: பெரியாநங்கை
குளம்: அகிலி

பதிகம்: மருந்துவேண் -3 -25 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவிசலூர் அஞ்சல்
வேப்பத்தூர்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612105
தொபே. 0435 2000240

இக்காலம் நண்டாங்கோயில் என்று வழங்கப்பெறுகின்றது. இது திருவிடைமருதூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கே 8 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திற்குக் கிழக்கில் 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருவியலூர்க்குச் சென்று, அங்கிருந்து வடக்கே 1.5 கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத் திலிருந்து திரு விசலூர் வரை செல்லும் பேருந்து வசதி உள்ளது. திருந்துதேவன்குடி என்னும் ஊர் இக்காலத்தில் இல்லை. கோயில் மாத்திரம் இருக்கிறது. ஊர் இருந்த இடம் நன்செய் நிலங்களாக இருக்கின்றன. கோயிலைச் சுற்றி மூன்று பக்கமும் அகழிகள் இருக்கின்றன. இது காவிரி வடகரைத் தலங்களுள் 42 - ஆவது ஆகும்.

இறைவர் திருப்பெயர் - கற்கடேசுவரர். (கற்கடம் = நண்டு) இறைவியின் திருப்பெயர் - அருமருந்து அம்மை. நண்டு பூசித்துப் பேறெய்திய தலம். பெருமானுடைய தலையில் துவாரம் இருக்கிறது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி