தண்டலைநீணெறி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு ஞானாம்பிகை உடனுறை நீள்நெறிநாதர்
மரம்: ஓரிலைக் குருந்தம்
குளம்: காவிரி, ஓமக தீர்த்தம்

பதிகம்: விரும்புந் -3 -50 திருஞானசம்பந்தர்

முகவரி: தண்டலைச்சேரி
வேளூர் அஞ்சல்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் 614715
தொபே. 9865844677

தண்டலை என்பது இக்காலம் தண்டலைச்சேரி என வழங்கப் பெறுகின்றது. ஊரின் பெயர் தண்டலை. இங்குள்ள கோயிலின் பெயர் நீள்நெறி. இது திருத்துறைப்பூண்டி தொடர்வண்டி நிலையத்திற்கு 5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. மணலி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கியும் இவ்வூருக்குச் செல்லலாம். இது காவிரித்தென்கரைத் தலங்களுள் 110 ஆவது ஆகும். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி வழியில் செல்லும் பேருந்துகளில் இவ்வூரை அடையலாம். இறைவர் திருப் பெயர் - நீள்நெறிநாதர். இறைவி திருப்பெயர் - ஞானாம்பிகை.

மரம் - குருந்தம்.

இது, ஆமை அவதாரங்கொண்ட திருமால் செருக்குற்றுக் கடலைக் கலக்கச் சிவபெருமான் அதன் செருக்கை அடக்கி, அதன் ஓட்டை அணிந்தருளியபதி. இது கோச்செங்கட் சோழரால் கட்டப்பெற்ற மாடக்கோயில்களுள் ஒன்று. இச்செய்தி ``செம்பியன் கோச்செங்கண் நிருபர் தண்டலைநீணெறி காண்மினே`` என்னும் இவ்வூர்க்குரிய சம்பந்தர் பதிக அடிகளால் விளங்கும். அரிவாட்டாய நாயனார் சிவபெருமானுக்குச் செந்நெல் அரிசி, மாவடு, செங்கீரை, இவைகளை நாளும் நிவேதித்து வீடுபேறு அடைந்த தலம். அரிவாட்டாய நாயனார் அவதரித்த கணமங்கலம், தண்டலைக்குக் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. நீள்நெறிக்கோயிலில் அரிவாட்டாய நாயனார், அவரது மனைவியார் இவர்களின் பிரதிமைகள் இருக்கின்றன. தண்டலையார் சதகம் என்னும் பழமொழி யோடு பல நீதிகள் பொதிந்த நூல் அச்சில் வெளி வந்துள்ளது. அதை இக்காலம் விரும்பிப் படிப்பவர் மிகச் சிலரே யாவர். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி