செம்பொன்பள்ளி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு மருவார்குழலி உடனுறை சுவர்ணபுரீசுவரர்


மரம்: வன்னி
குளம்: இந்திரதீர்த்தம், காவிரி

பதிகங்கள்: மருவார்குழ -1 -25 திருஞானசம்பந்தர்
ஊனினுள்ளுயி -4 -29 திருநாவுக்கரசர்
கானறாதகடி -5 -36 திருநாவுக்கரசர்

முகவரி: செம்பொனார்கோயில் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609309

சோழநாட்டுக் காவிரித்தென்கரைத்தலம். மயிலாடுதுறையி லிருந்து பேருந்து வசதி உள்ளது. இத்தலம் செம்பொனார்கோயில் என இக்காலத்து வழங்கப் பெறுகின்றது. இந்திரன் விருத்திராசுரனைக் கொல்வதன் பொருட்டுப் பூசித்து வழிபட்டான். அதனால் இந்திரபுரி எனவும் வழங்கப்பெறும். முருகப்பெருமான் தாரகாசுரவதத்தின் பொருட்டுப் பூசித்தமையின் ஸ்கந்தபுரி எனவும் வழங்கும். அகஸ்தியர் வழிபட்டுப் புருஷார்த்தங் களைப் பெற்றார். பிரமன் பூசித்துப் படைப்புத்தொழில் கைவரப் பெற்றான். இரதி பூசித்துத் தன் பதியாகிய காமனையடைந்தாள். நாககன்னியர்கள் வழிபட்டு நல்ல கணவரை அடைந்தனர். இந்திரன், தக்ஷன்யாகத்தில் கலந்துகொண்ட குற்றத்திற்குப் பரிகாரந்தந்தருளிய தலமும் இதுவே. வசிட்டர், திக்பாலகர்கள், காவிரி, சமுத்திரம் முதலிய வர்களும் பூசித்துப் பேறு பெற்றனர். வீரபத்திரர் தக்ஷயாகத்திற்காக அவதரித்த தலமும் இதுதான். இத்தலத்திற்கு அருகாமையில் ஓடும் காவிரியில் இட்ட எலும்புகள் பூமரங்களாய் இறைவனுக்குச் சாத்தப் பயன்பெறும்.

சுவாமிபெயர் சுவர்ணபுரீசுவரர். அம்மைபெயர் சுகந்தவன நாயகி; மருவார்குழலி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் இந்திர தீர்த்தம், காவிரி முதலியன. கிழக்குப்பார்த்த சந்நிதி. அம்மை தென்பக்கத்தில் மேற்குமுகமாக எழுந்தருளியிருக்கின்றார்.கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றியனவாக 6 கல்வெட்டுக்கள் உள்ளன. அவை 1925 இல் படியெடுக்கப்பெற்றுள்ளன. இராஜாதிராஜன் ஆட்சி ஐந்தாமாண்டில் திருவாலங்காடுடையார்க்கு விளநகரான நித்த விநோத சதுர்வேதிமங்கலத்து விளநாட்டுச்சபையார் நிலம் விட்ட செய்தியை அறிவிப்பது. அதேயாண்டில் இராஜதிராஜவளநாட்டு திருஇந்தளூர் நாட்டு மணற்குடியான உத்தமசோழ சதுர்வேதிமங் கலத்துச் சபையார், செயங்கொண்டசோழ மண்டலத்து ஆக்கூர்நாட்டு ஆக்கூரான இராஜேந்திரசிம்ம சதுர்வேதிமங்கலத்து மேல்பாதி அபிமானமநல்லூரில் அரசற்கு நன்றாக, வழிபடவருவோர்க்கு உணவிற்காக நிலம் வழங்கப்பெற்றுள்ளது .(72, 173 of 1925) மூன்றாங்குலோத் துங்கன் காலத்து இராஜேந்திர சிம்ம நாடாகிய ஆக்கூரில் தூண்டா விளக்கெரிக்க நாற்பது பொற்காசுக்கு நிலம் வாங்கி உழவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 6 ஆம் ஆண்டில் அரசியலில் சிறந்த செய்தி ஒன்று அறிவிக்கப்படுகிறது. சிங்களவர்களைத் துணைக்கொண்டு பாண்டியர் கள் படையெடுத்துவந்த படையேறு கலகத்தில் செம்பொன்னார் கோயிலிலுள்ள தேவடியாரும் கோயில் நியாயத்தாருமாகச் சேர்ந்து எல்லாத் திருவுருவங்களையும் திருவிடைக்கழி இளையபிள்ளையார் கோயிலில் கொண்டுபோய் வைத்துப் பாதுகாத்தனர். மேலும் அவ்வாண்டில் பெரிய புயற்காற்றடித்திருக்கின்றது. அதனால் தப்பாத வேதியன் திருவாசல் வடக்குச்சுவரும் தேரடி இரண்டும் வீழ்ந்தன(170, 171 of 1925;) இன்னார் என்று அறியப்படாத இராஜகேசரி வர்மன் ஆறாம் ஆண்டில் பூசைக்கும் பணிக்குமாகத் தலைச்செங்காட்டுச் சபையார் ஒருவனி டமிருந்து நிலம் வாங்கி அரசற்கு நன்றாக அளித்தனர். இதில் இராஜ சுந்தரன்வீதி என்ற ஒரு தெருப்பெயர் குறிப்பிடப்படுகின்றது.(174 of 1925; ) சரபோஜிராஜா கலி 4821-ல் செம்பொன்னாதர் கோயிலுக்குத் தலைச் சங்காடு சபையார் கிராமங்களின் நன்மைக்காக ஆண்டுக்கு ஒருமுறை வரியோடுகூட தறிகளின் உற்பத்தியளவையொட்டி ஆயம் வசூலித்துக் கொள்ளவும் காவேரிப்பட்டினம் அய்யாவையனும் தாண்டவராய முதலியாரும் வசூலிப்பாளராயிருக்கவும் ஆணை தரப்பட்டுள்ளது .(175 of 1925)

 
 
சிற்பி சிற்பி