சுழியல்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு துணைமாலைநாயகி உடனுறை திருமேனிநாதர்


மரம்: புன்னை
குளம்: கவ்வைக் கடல் (ஒலிப் புணரி)

பதிகம்: ஊனாய் உயிர்புகலாய் -7 -82 சுந்தரர்

முகவரி: திருச்சுழி அஞ்சல்
திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம், 626129
தொபே. 04566 282644

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பூவணத்துக்குத் தெற்கே இருபத்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. பார்வதி தேவியாரும், சதாநந்த முனிவரும் பூசித்துப் பேறுபெற்ற தலம்.கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் இருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் இரண்டு கல்வெட்டுக்கள் தமிழ் வட்டெழுத்துக்களில் செதுக்கப் பட்டவை. அவை இரண்டும் முதலாம் இராசராசன் காலத்தவை. அவைகளில் ஒன்று காந்தளூர்ச்சாலை கலமறுத்த இராசகேசரிவர்மன் என்று முதலாம் இராசராசனைக் குறிக்கின்றது. மற்றொரு கல்வெட்டு திருவிளக்குக்கு நிவந்தம் அளித்ததைக் குறிப்பிடுகிறது. வேறொரு கல்வெட்டு, பிரளயங்காத்த விடங்கர் கோயில் அருகாலில் உள்ளது. அது சகாப்தம் 1152 இல் ஏற்பட்டது. கல்வெட்டு முடிவுபெறாதது. ஜனநாதனுடைய தோல்வியை அது குறிப்பிடுகின்றது.

 
 
சிற்பி சிற்பி