கோளிலி (திருக்கோளிலி) (திருக்குவளை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வண்டமர்பூங்குழலாள் உடனுறை பிரமபுரீசுவரர்


மரம்: தேற்றா மரம்
குளம்: முத்திநதியாகிய சந்திரநதி

பதிகங்கள்: நாளாயபோ -1 -62 திருஞானசம்பந்தர்
மைக்கொள் -5 -56 திருநாவுக்கரசர்
முன்னமே -5 -57 திருநாவுக்கரசர்
நீளநினைந்தடி -7 -20 சுந்தரர்

முகவரி: திருக்குவளை அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610204
தொபே. 04366 245412

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். திருவாரூரிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். திருக்குவளை என வழங்கப் பெறுகிறது.

ஆதியில் பிரமன் சிருட்டித் தொழிலைப் பெறவேண்டிப் பூசித்தான். அதனால் பிரமதபோவனம் என வழங்கப்பெறும். இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இங்கே எழுந்தருளியுள்ள தியாகர் அவனி விடங்கர்.

நவகோள்கள் பூசித்துப் பேறு பெற்றமையால் கோளிலி என வழங்கப்பெறுகிறது. இறைவன் பிரமபுரீசுவரர். அம்மைவண்டமர்பூங்குழலாள். தியாகர் ஊழிப்பரன், அவனிவிடங்கத்தியாகர். விநாயகர் தியாக விநாயகர். முருகன் சுந்தரவடிவேலன். சுந்தரமூர்த்திகளுக்குக் குண்டையூர்கிழார் தந்த நெல்மலையைப் பூதங்களைக் கொண்டு திருவாரூரில் சேர்ப்பித்த அற்புதத்தலம். தீர்த்தம் முத்திநதியாகிய சந்திரநதி, மணிகர்ணிகை, இந்திர தீர்த்தம், அகத்தியதீர்த்தம், விநாயகதீர்த்தம், சக்தி தீர்த்தம் என்பன. விருட்சம் தேற்றாமரம்.

வழிபட்டவர்கள்:

பிரமதேவர், திருமால், இந்திரன், அகத்தியன்,முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகோள்கள், ஒமகாந்தன் முதலியோர்.

விழாக்கள்:

மாசிமகத்தில் நெல்திருவிழா, மார்கழிமாதத்தில் ஆருத்ரா தரிசனம். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்த்தம்.தருமை ஆதீன அருளாட்சியிலுள்ளது.



கல்வெட்டு:

இங்குள்ள கல்வெட்டுக்கள் 19. இத்தலம் இராஜேந்திர சோழவளநாட்டு இடையளநாட்டு வெண்டாழை வேளூர்க்கூற்றத் திற்கு உட்பட்டதாயிருந்தது. வடவல்லத்து இருள்குடியான் இந்திரா பதிநல்லூர் உய்யவந்தான் சிய்யாழிப் பிள்ளையான ஜெயதுங்க வன்மன் மகாமண்டபந் தொடங்கிக் கீழைவாசல்வரையில் திருப்பணி செய்தான். இத்திருப்பணி ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்த தாகும். இந்தக்கோயிலில் சிவன்படரில் (செம்படவர்) ஒருவனான ஆலன் என்பான் அதிபத்தநாயனார் படிவத்தை எழுந்தருளுவித்தான்.

 
 
சிற்பி சிற்பி