கோலக்கா
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு ஓசைநாயகி உடனுறை தாளபுரீசுவரர்


மரம்: கொன்றை மரம்
குளம்: சூரிய புட்கரணி

பதிகங்கள்: மடையில் -1 -23 திருஞானசம்பந்தர்
கோலக்கா புற்றில் வாளர -7 -62 சுந்தரர்

முகவரி: சீர்காழி அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609110
தொபே. 04364 274175

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். சீகாழிக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்தலம் திருத்தாளமுடையார்கோயில் என வழங்குகிறது. திருஞானசம்பந்த சுவாமிகள் திருமுலைப்பால் உண்டருளிய மறுநாள், இத்தலத்திற்கு எழுந்தருளிக்கையினால் தாளம் இட்டுப் பாடினார். அப்போது இறைவன் திருவருளால் திருவைந்தெழுத்து எழுதப்பெற்ற பொற்றாளம் இவர் கைவந்தருளப்பெற்றது. சுவாமி பெயர் சப்தபுரீசுவரர். அம்மைபெயர் ஓசைகொடுத்தநாயகி. கிழக்குப் பார்த்த சந்நிதி. கோயில் வாயிலில் அழகான தீர்த்தம் இருக்கிறது. சீகாழி திருமுலைப்பால் விழா அன்று மாலை ஞானசம்பந்த சுவாமி இங்கு எழுந்தருளுவர்.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி