கொட்டையூர்க்கோடீச்சுரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க

பதிகம்: கருமணிபோற் கண்ட 6 - 73, திருநாவுக்கரசர்<r><r> நாடெல்லாம் நீர் நாடு தனையொவ்வா நலமெல் லாம் என்று சேக்கிழார் சுவாமிகளாற் சிறப்பிக்கப்பெற்ற சோழ வளநாட்டிலுள்ள சிவ தலங்கள் பலவற்றிற் சிறந்தெதான்றாம் மட்டறு நலமிகு கொட்டையூர் என்பது.

இத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பேகாணத்திற்கு வடமேற்கே ஒன்றரை கி.மீ. தூரத்தில் காவிரியாற்றின் வடகரையில் அமைந்துள்ளது.

வேறுபெயர்கள்: இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்னும் வேறு பெயர்களும் உள. எனினும் கொட்டையூர் என்ற பெயரே தேவாரத்திலும் கல்வெட்டுக்களிலும் ஆளப்பட்டுள்ளது.

திருக்கோயில்:

சிவதலங்கள் சிலவற்றிற்கு ஊரின்பெயரும், திருக்கோயிலின் பெயரும் வேறு வேறாக அமைந்துள்ளன. எடுத்துக் காட்டாகத் திருவாரூர்ப் பூங்கோயில், சாந்தை அயவந்தி, செங் காட்டங்குடிக் கணபதீச்சரமென்பன. இம்முறையில் இவ்வூர்த் திருக் கோயிலுக்குக் கோடீச்சுரம் என்பது பெயர்.

கோடீச்சுரப் பெயர்க் காரணம்: பத்திரயோகி முனிவருக்கு இக்கொட்டையூர்க்கோமான் கோடிவிநாயகர், கோடி அம்மையார், கோடிமுருகர், கோடிச்சண்டேசுவரர்களோடு தாமும் கோடித் திருவுருவம்கொண்டு காட்சியருளினர். இதனால் இவ்வூர் இறைவர்க்குக் கோடீச்சுரன் எனப் பெயராயிற்று. இங்ஙனம் கோடீச்சுரன் உறைவது கோடீச்சுரமாயிற்று. இன்னும் சிவலிங்கப் பெருமான் திருவுருவம் பலாக்காய் போன்று முள்முள்ளாகத் திருமேனியெங்கும் உடைமை நேரிற் கண்டறியத்தகும். ஒவ்வொரு முள்ளும் ஒவ்வொரு சிவலிங்கமாகும். கோடிவிநாயகர் திருமேனியிலும் பல விநாய வடிவங்கள் காணப்படும்.

மூர்த்திகள்: கோயிலில் மூலஸ்தானத்துள்ள சிவலிங்கத் திற்கு கோடீச்சுரர் என்பது பெயர். அம்மையார் பந்தாடு நாயகி. இத்திருப்பெயர் அப்பர் பெருமானால் இவ்வூர்ப் பதிகத்தில் பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய் என எடுத்து ஆளப்பட்டிருப்பது பெருமகிழ்வு தருவதாய் உள்ளது.

தீர்த்தங்கள்: காவிரியாறு, அமுதக்கிணறு (அ) கோடி தீர்த்தம் என்பவை. அமுதக்கிணறு கோயிலின் முதலாம் திருச் சுற்றாலையில் உள்ளது.

தல விருட்சம்: கொட்டைச் செடி.

திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர். வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்றும், இத்தலத்திற் செய்த பாவமும் அப்படியே கோடி மடங்காகிக் கழுவாய் இலதாமென்றும் பெரியோர் கூறுவர். கொட்டை யூரிற் செய்த பாவம் கொட்டையோக்டே என்ற பழமொழியும் இத் தலத்தின் சிறப்பை உணர்த்தும்.

தலத்தைப்பற்றிய நூல்கள்: கொட்டையூர், திருவலஞ்சுழி என்ற இரண்டு தலங்களையும் இணைத்துத் திருநாவுக்கரசர் தேவாரம் பாடியுள்ளார். இத்தலத்திற்கு அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப் பாட்டும் உண்டு. இத்தலத்துப் பிறந்து வளர்ந்த சிறந்த புலவரான சிவக்கொழுந்து தேசிகர் கோடீச்சுரக்கோவை ஒன்று பாடியுள்ளார். அது டாக்டர். உ.வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய உலா ஒன்றும் இத்தலத்திற்கு உளது என்பர். அது இதுபொழுது கிடைப்பது அரிதாய் இருக்கிறது. இத்தல மான்மியம் உரைநைடயில் அச்சில் வெளிவந்துள்ளது.
கல்வெட்டு:

இக்கோயிலில் இரண்டாம் இராஜாதி ராஜ சோழன் (கி.பி.1163 - 1178) காலத்தது ஒன்றும், இவனுக்குப் பின் பட்டம் எய்திய மூன்றாங் குலோத்துங்கன் (கி.பி. 1178 - 1216) காலத்தவை மூன்றுமாக நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி அம்மன் கோயிலில் ஒரு கல்வெட்டும் உண்டு.

இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டு: இஃது அர்த்த மண்டபத்துத் ெதன்புறச் சுவரின் அடித்தளத்தில் இருக்கிறது. இது இம்மன்னன் அரியைண ஏறிய மூன்றாம் ஆண்டு அதாவது கி.பி. 1166 இல் பொறிக்கப் பெற்றது. இன்னம்பர் நாட்டு ஏர் என்னும் ஊரிலிருந்த அரையன்பொற்சோழன் மனைவியாகிய அருமொழி நங்ைகயார் இக்கொட்டையூர்க் கோடீச்சுரமுடையார் கோயிலில் புராணலிங்க தேவரை எழுந்தருளுவித்து அவர்க்கு அமுதுபடி உள்ளிட்டவைகளுக்கு நிவந்தம் அளித்துள்ள செய்தியை உணர்த்துகின்றது.

மூன்றாங் குலோத்துங்கன் கல்வெட்டு 1: இது மகாமண்டபத்தின் வடபுறச் சுவரில் இருக்கிறது. இஃது இம்மன்னன் அரியைண ஏறிய 32 ஆம் ஆண்டில் (கி.பி. 1210) பொறிக்கப்பெற்றது. திருக்கோடீச்சுரமுடையார்க்கு மங்கலவன் பெரியேதவன், நச்சினார்க்கினியன் முதலான சிலர் ஒரு பித்தளைக் குத்துவிளக்குக் கொடுத்தைத இக்கல்வெட்டு உணர்த்துகின்றது.

மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு 11: இதுவும் மகா மண்டபத்தின் வடபுறச் சுவரிலுள்ளது. இது இம்மன்னன் அரியைண ஏறிய 27 ஆம் ஆண்டில் (கி.பி. 1205) செதுக்கப்பட்டது. இக்கோயில் திருமைடவிளாகத்து இருந்த பொன்னாரம்புடையான் அபயம் புக்கானின் மனைவியாகிய உதயஞ்செயல் என்னும் அம்மையார் திருக்கோடீச்சுரருக்குக் கோவை திருவிலைத்தட்டு, ஊதுசங்கு, வட்டில், பஸ்மதளிைக இவைகளைக் கொடுத்துள்ளார் என்ற செய்தியைப் புலப்படுத்துகின்றது.

மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு 111: இது முதற் கோபுரத்தின் ெதன்பால் கீழ்புறச் சுவரில் இரண்டு துண்டுக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இது இம்மன்னன் அரியைண ஏறிய 36 ஆம் ஆண்டில் (கி.பி. 1214) தீட்டப்பட்டது. இது திருப்புகலூரில் இருந்த மும்மேலிரனதாள நாயகன் திருநந்தவனத்திற்கு உடலாகப் பொருள் வைத்துள்ளான் என்று எண்ணக்கூடிய குறிப்புகள் அடங்கியதாய் உள்ளது.

அம்மன்கோயிற்கல்வெட்டு: சுவஸ்திஷ்ரீ எழுபத்ெதாம்பது வளநாடும், நகரமும் பதினொண்ேண விஷையத்தாரும் தன்மம் என்பதாகும். இதனால் பலரிடத்தும் பொருளீட்டி இத்திருக்காமக்கோட்டம் எடுப்பிக்கப்பெற்றது என்பைத அறியலாம். கொட்டையூர் வேங்கடாசலம்பிள்ளையின் கல்வெட்டு: இது முதல் கோபுர வாசலடியில் இருக்கின்றது. கலியுகாதி 5014 தமிழ் பரிதாபி தை 4 இல் செதுக்கப்பட்டது. கோடீச்சுரப் பெருமானுக்கு, காலைச்சந்திக் கட்டளை, சோமவாரக் கட்டளை, சிவராத்திரிக்கட்டளை இவைகளுக்காக மேலைக்காவேரியில் 3 ஏக்கர் 85 சென்ட் நன்செய் நிலம் விட்டிருப்பைத அறிவிப்பதாகும்.

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்ட நாடு:

இன்னம்பர் நாட்டுப் பிரமேதயம் என்று கொட்டையூர் கூறப்படுகிறது. இவ் வின்னம்பர் நாட்டை உள்ளடக்கிய வளநாடு முதலாம் இராஜராஜன் காலத்தில் இராஜேந்திர சிங்க வளநாடு என்றும், முதற் குலோத்துங்கன் காலத்தில் இதன் மேலைப்பகுதி உலகுய்யவந்த சோழ வளநாடு என்றும், விக்கிரமசோழன் காலத்தில் விக்கிரம சோழ வளநாடு என்றும் வழங்கப்பெற்றிருந்தது. இவ்விக்கிரம சோழ வளநாடு என்ற பெயரே இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாங் குலோத்துங்கன் இவர்கள் காலத்திலும் நின்று நிலவுவதாயிற்று. இக்கொட்டையூர்க்கு வடக்கே சுமார் மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கும் ஏர் என்னும் வைப்புத்தலத்தின் பெயர் இக்கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த ஏர் என்னும் ஊர்க்கு குலோத்துங்கசோழ வானவன் மங்கலம் என்ற வேறு பெயர் உண்மையையும் அறியலாம். இக்காலம் இவ்வூர் ஏரகரம் என்று வழங்கப்பெறுகின்றது.

 
 
சிற்பி சிற்பி