கேதாரம் (திருக்கேதாரம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு கேதார கௌரியம்மை உடனுறை கேதார நாதர்


பதிகங்கள்: தொண்டரஞ்சு -2 -114 திருஞானசம்பந்தர்
வாழ்வாவது -7 -78 சுந்தரர்

முகவரி: கேதாரம்
உத்திராஞ்சல் மாநிலம்

காசியிலிருந்து தொடர் வண்டியில் ஹரித்துவார் சென்று அங்கிருந்து பேருந்துகளில் கௌரிகுண்டம் வரைசென்று அங்கிருந்து குதிரைகளிலோ, கால்நடையாகவோ கேதாரம் செல்லலாம்.

இதுவடநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. பிருங்கி முனிவரின் பொருட்டு இறைவியார் இறைவரைப் பூசித்து இடப்பாகம் பெற்ற தலமாகும். இத்தலத்தில் ஆறுமாதம் தேவர்களாலும், ஆறு மாதம் மனிதராலும் பூசைகள் செய்யப்படுகின்றன. இத்தலத்தில் தேவ பூசை ஐப்பசி பௌர்ணமியில் தொடங்குகிறது. அப்பொழுது பனிக் கால மாதலால் அங்கு மனிதர்களே இருக்கமுடியாது. அர்ச்சகர் முதலானோர் மலையைவிட்டு வந்து விடுவர். பனிக்காலமாகிய ஆறுமாதம் கழித்துப் பூசைக்குச் செல்வர்.திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், திருக்காளத்தியிலிருந்தே இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இறைவரின் திருப்பெயர்:- கேதார நாதர். இறைவியாரின் திருப் பெயர்:-கேதார கௌரியம்மை.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி