குற்றாலம் (திருக்குற்றாலம்) (குறும்பலா)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு குழல்வாய்மொழியம்மை உடனுறை குற்றாலநாதர்


மரம்: குறும்பலா, குத்தாலம்
குளம்: சிவமது கங்கை, வட அருவி, சித்திரா நதி

பதிகங்கள்: வம்பார்குன் -1 -99 திருஞானசம்பந்தர்
திருந்தமதி -2 -71 திருஞானசம்பந்தர்

முகவரி: குற்றாலம் அஞ்சல்
திருநெல்வேலி மாவட்டம், 627802
தொபே. 04633 283138

நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே உள்ளது. நடராஜப்பெருமானுக்குரிய பஞ்ச சபைகளில் சித்திரசபை. திரிகூடராசப்பக்கவிராயர் தலபுராணம் முதலிய பிரபந்தங்கள் எழுதியுள்ளார். சுற்றுலாத் தலங்களில் சிறப்புடையது.

திருமால் வடிவில் இருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியாக மாற்றிய தலம். இங்குள்ள அருவி புகழ் பெற்றது. குற்றால அருவியில் குளிப்பதற்கு ஜுன், ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் பலரும் வருவர். திருஞானசம்பந்தர் தேவாரம் பெற்றது. சுவாமி பெயர் குற்றாலநாதர். அம்பாள் பெயர் குழல்வாய்மொழியம்மை. இத்தலம் குறும்பலா எனவும் வழங்கப் பெறும்.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி