குரங்காடுதுறை(தென்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பவளக்கொடியம்மை உடனுறை ஆபத்சகாயர்


மரம்: வில்வம்
குளம்: சகாய தீர்த்தம்

பதிகங்கள்: பரவக்கெடும் -2 -35 திருஞானசம்பந்தர்
இரங்காவன் -5 -63 திருநாவுக்கரசர்

முகவரி: ஆடுதுறை அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612101
தொபே. 0435 2470215

மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில், ஆடுதுறை தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே 3/4 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களில் முப்பத் தோராவது. மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து வழியிலுள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய நகரங்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன.

இறைவரது திருப்பெயர் ஆபத்சகாயர், (ஆபத்சகாயேசர்) இறைவியாரது திருப்பெயர் (பவளக்கொடியம்மை) வண்டார் கருமென்குழல்மங்கை. இப்பெயரை இவ்வூர்ப் பதிகத்தின் இரண்டாம் திருப்பாட்டில் திருஞானசம்பந்தப் பெருந்தகையார் எடுத்துரைக்கின்றார்கள்.

வாலி அநுமான் இவர்களால் பூசிக்கப்பெற்றது. திருவையாற்றிற்குக் கிழக்கே 9 கி.மீ. தூரத்தில் காவிரியின் வடகரையில் குரங்காடுதுறை என்னும் ஊர் ஒன்று இருக்கிறது. அது வட குரங்காடுதுறையாகும். இது காவிரிக்குத் தென்கரையில் இருப்பதால் தென் குரங்காடுதுறை என்னும் பெயர்பெற்றது. இவ்வூரை மக்கள் ஆடுதுறை என்றே அழைக்கின்றனர். இது உத்தமசோழ தேவரது தாயாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி