அரதைப்பெரும்பாழி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு அலங்காரவல்லி உடனுறை பாதாளவரதர்

மரம்: வன்னி
குளம்: பிரம தீர்த்தம்

பதிகம்: பைத்தபாம்போடு -3 -30 திருஞானசம்பந்தர்

முகவரி: அரித்துவாரமங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612802
தொபே. 9442175441

இது தஞ்சாவூர்-நாகூர் தொடர்வண்டிப் பாதையில்,கோயில்வெண்ணி தொடர்வண்டி நிலையத்திலிருந்து 8 கி. மீ. தூரத்திலிருக்கிறது. சாலிய மங்கலம் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கியும் செல்லலாம். அதிக தூரமாகும்.

இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 99ஆவது ஆகும். தஞ்சையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.பேருந்தில் செல்வதே எளிதான வழியாகும்.

இது, வராக அவதாரங்கொண்ட திருமாலின் கொம்பைப் பறித்துச் சிவபெருமான் அணிந்துகொண்ட தலம். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது.

இது அரித்துவாரமங்கலம் என்று வழங்கப் பெறுகின்றது.இறைவன் திருமுன்பு பன்றியாகிய திருமால் பறித்த பள்ளம் இருப்பதால் இப்பெயர் பெற்றது என்பர்.


கல்வெட்டு:

இவ்வூர்த் திருக்கோயிலில் மூன்றாங்குலோத்துங்க சோழ தேவரின் பத்தாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்று மட்டுமே உளது.

அதுவும் சிதைந்த நிலையில் உள்ளது. அம்மன்னன் மதுரை கொண்ட செய்தியை அது உணர்த்துகிறது.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902, No. 611).

 
 
சிற்பி சிற்பி