ஒன்பதாம் திருமுறை
29 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 3 பண் : பஞ்சமம்

தற்பரம் பொருளே சசிகண்ட சிகண்டா
    சாமகண் டா அண்ட வாணா
நற்பெரும் பொருளாய் உரைகலந் துன்னை
    என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத் தளவிலா உன்னைத்
    தந்தபொன் னம்பலத் தரசே
கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்
    தொண்டனேன் கருதுமா கருதே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

`தத்` என்ற சொல்லால் குறிக்கப்படும் மேம்பட்ட பொருளே! சந்திரனைச் சூடிய முடியினை உடையவனே! சாமவேதம் பாடும் குரல்வளையை உடையவனே! சிதாகாசத்தில் வாழ்கின்ற வனே! அங்கு மேம்பட்ட பரம்பொருளாய் இருப்பவனே! எனக்குத் தெரிந்த சொற்களைக்கொண்டு உன்னை என் நாவினால் புகழும்படி என் சிறிய உள்ளத்தில் எல்லை காணமுடியாத உன்னைத் தங்கச் செய் துள்ள பொன்னம்பலத்துக் கூத்தாடும் அரசே! ஊழிக் காலங்களாக வும், அந்தக் கால எல்லைக்குள் தோன்றி மறையும் பொருள்களாக வும், அவற்றின் வேறுபட்டவனாகவும் உள்ள உன்னைத் தொண்ட னாகிய நான் தியானிக்குமாறு என்திறத்து நீ செயற் படுவாயாக!

குறிப்புரை :

தத் பரம்பொருள் - வேதத்துள், `தத்` என்னும் சொல்லால் குறிக்கப்படும் பரம்பொருள். `தன் பரம்` எனப் பிரித்து, தனக்கு மேலான - உணர்கின்ற பொருட்கு (உயிர்கட்கு) மேலாய பொருள் என உரைத்தலும் உண்டு. சசிகண்டன் - நிலாத் துண்டத்தை யணிந்தவன். இப்பெயர் விளியேற்றது - சீகண்டன் என்பது முதல்குறுகி, விளியேற்றது. சிகண்டம், முடி என்பாரும் உளர். சாமகண்டன் - கருமையான கழுத்தை உடையவன் `சாமவேதம் முழங்கும் குரலை உடையவன்` என்றலும் உண்டு. அண்டம் என்றது, சிதாகாசத்தை. நற்பெரும்பொருள் என்றதில், பொருள், சொற்பொருள். உரைகலந்து - எனது சொல்லிற்சேர்த்து. அற்பன் - சிறியன். கற்பம் - ஊழிக்காலம். உலகு - அக்கால எல்லைக்குள் தோன்றி நின்று ஒடுங்கும் பொருள்கள்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Supreme That! One with crescent-upon-crest!
Saama-chanting larynx! Stereonaut of thought!
Goodly lofty Ens! May I praise you with my tongue
In a mincing discourse.O! King of Auric-Hall
Who boundless bide in my little heart even.
Aeons of Dissolution You are forming,fading
As variant therein.May you will it so
I your servient one would e`er meditate on you.
Translation: S. A. Sankaranarayanan (2007)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
tha'rparam poru'lae sasika'nda sika'ndaa
saamaka'n daa a'nda vaa'naa
:na'rperum poru'laay uraikala:n thunnai
ennudai :naavinaal :navilvaan
a'rpanen u'l'lath tha'lavilaa unnaith
tha:nthapon nampalath tharasae
ka'rpamaay ulakaay allaiaa naayaith
tho'ndanaen karuthumaa karuthae.
சிற்பி