ஒன்பதாம் திருமுறை
29 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 2 பண் : பஞ்சமம்

இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
    இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
    தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா
    அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
    தொண்டனேன் பணியுமா பணியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

என்னுடைய துயரங்களைப் போக்கி என்னை அடியவனாக ஏற்றுக்கொண்டு, என் உள்ளத்தில் உள்ள அறியாமையைச் செய்யும் ஆணவமலத்தை அடியோடு போக்குதலால் வெளிப்பட்டு விளங்கும் தூய்மையான அழகிய விளக்குப் போன்ற ஆன்ம அறிவினுள் ஒளிமயமாகக் காட்சி வழங்கும் மேம்பட்ட சோதியே! பகைவர்களை அழிக்கும் காளையை வாகனமாக உடையவனே! பொன்னம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! பிரமனும் திருமாலும் உன் உண்மை உருவத்தை அறியமுடியாதபடி எங்கும் பரவும் ஒளியைப் பரவச்செய்து எல்லா இடங்களிலும் வியாபித்து நிற்கும் உன்னை உன் அடியவனாகிய நான் வணங்கும்படியாக நீ திருவுள்ளம் கொண்டு செயற்படுவாயாக.

குறிப்புரை :

இருட்பிழம்பு என்றது, அறியாமையைச் செய்யும் ஆணவ மலத்தை. சுடர்மணி விளக்கு என்றது, அம்மலத்தின் நீங்கி விளங்கும் ஆன்ம அறிவினை. தூயநற் சோதி எனப்பட்டதும் அதுவே. `ஒளியாய்` என ஆக்கம் வருவிக்க. சோதியுட் சோதி என்றது, வாளா பெயராய் நின்றது. எனவே, `சுடர்மணி விளக்கினுள் ஒளி விளங்கும்` என்றது, இப்பெயர்ப் பொருளை விரித்தவாறாம். பரஞ்சுடர்ச் - சோதியுட் சோதி யாய்நின்ற சோதியே (தி.5. ப.97. பா.3) என்றும், சோதியாய் எழும் சோதியுட் சோதிய (தி.12. தடுத் - 192) என்றும் வருவனவற்றால், இறைவன், `சோதியுட் சோதி` எனப்படுதல் அறிக. `எறிந்து விளங்கும் சோதி` என முடிக்க. அடல் - வலிமை. பாகன் - நடத்துபவன்.
அறியாமை - அறியாதபடி. `அறியாமை நின்றாயை` என இயையும்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
O! Incandescence that sublimes my gnosis
As murkless lamp manifest cleansing the flaw
Of pride-born nescience. My grief you`ve wiped out,
Me, you have taken as your slave. O! foe-feller!
Taurus-vehiclist! Dance-shower in auric spatium!
Untracked by Brahma and fair Maal your mien
Exudes light in all planes unpolarised!May you will so
I, your subservient one bow unto your omneity.
Translation: S. A. Sankaranarayanan (2007)


“O’ God! You are the brightness within
the brightness of sacred and good ruby.
You conferred grace on me and destroyed
the suffering of my existence in this world
by uprooting the darkness of my ignorance.
You are riding the strong bull as your vehicle.
You are the cosmic dancer in the golden arena
of the universe. Please grant me the grace of
adoring you as ONE standing erect as the
great mountain disseminating so much
effulgence that Lord Brahmā and Lord Vishņu
did not know you because of their ignorance!”

Translation: Singaravelu Sachithanantham (2010)


ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
idarkeduth thennai aa'nduko'n dennu'l
irudpizham pa'rae'ri:n thezhu:ntha
sudarma'ni vi'lakki nu'lo'li vi'langku:n
thooya:na'r soathiyud soathee
adalvidaip paakaa ampalak kooththaa
ayanodu maala'ri yaamaip
padaro'li parappip para:nthu:nin 'raayaith
tho'ndanaen pa'niyumaa pa'niyae.
சிற்பி