ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 7 பண் : நட்டபாடை

பண்ணின்தமிழ் இசைபாடலின்
    பழவேய்முழ வதிரக்
கண்ணின்னொளி கனகச்சுனை
    வயிரம்மவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள்
    மணிவாரிக்கொண் டெறியக்
கிண்ணென்றிசை முரலுந்திருக்
    கேதாரமெ னீரே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உலகீர், பண்ணாகிய, தமிழ்ப்பாடலினது இசையைப் பாடுமிடத்து, அதற்கியையப் பழைதாகிய வேய்ங்குழலும், மத்தளமும் ஒலித்தலினாலும், கண்ணுக்கு இனிதாகிய ஒளியையுடைய பொன் வண்ணமான சுனைகள் வயிரங்களை அலைகளால் எடுத்து வீசுதலினாலும், நிலத்தில் நிற்கின்ற மத யானைகள், மாணிக்கங்களை வாரி இறைத்தலினாலும், ` கிண் ` என்கின்ற ஓசை இடையறாது ஒலிக் கின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.

குறிப்புரை :

` பண்ணின் இ? u2970?` என இயையும். இவ்விடத்து இன், அல்வழிக்கண் வந்த சாரியையாம். பழைமை, மரபு. ` வேய் ` ஆகு பெயர்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
People of this world!
when you sing the songs in Tamiḻ which has all the seven notes.
the ancient instrument flute is played the muḻavu is played on a high pitch as the mountain springs, which are golden in colour, pleasing to the eye, throw by their waves diamonds.
and as the elephants which have must and stand on the earth take in a swoop rubies and scatter them.
utter the name of Kētāram where the sweet sound of kiṇ` is produced.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
pa'n'ninthamizh isaipaadalin
pazhavaeymuzha vathirak
ka'n'ninno'li kanakachchunai
vayirammavai soriya
ma'n'nin'rana mathavaezhangka'l
ma'nivaarikko'n de'riyak
ki'n'nen'risai muralu:nthiruk
kaethaarame neerae
சிற்பி