ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 6 பண் : நட்டபாடை

தளிசாலைகள் தவமாவது
    தம்மைப்பெறி லன்றே
குளியீருளங் குருக்கேத்திரங்
    கோதாவிரி குமரி
தெளியீர்உளஞ் சீபர்ப்பதம்
    தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறியுண்
    கேதாரமெ னீரே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உலகீர், தேவகோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது, மக்கள் அவ்விடங்களை அடைந்தாலன்றோ ? இதனை மனத்துட் கொண்மின்கள் ; கொண்டு, தெற்கென்னும் திசை கிடைக்க, ` கோதாவரி, குமரி ` என்னும் தீர்த்தங்களிலும், வடக் கென்னும் திசைகிடைக்க, அழகிய குருக்கேத்திரத்தில் உள்ள தீர்த்தத் திலும் சென்று முழுகுமின்கள் ; அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும், வடக்கில் கிளிகள், பழத்தைக் கீறி உண்ணுகின்ற திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதிமின்கள்.

குறிப்புரை :

` தவச்சாலைகள் ஆவது ` என மாற்றியுரைக்க. ` குளியீர் உள் ` எனவும், ` அம் குருக்கேத்திரம் ` எனவும் பிரிக்க. ` குளியீர் ` என்ற தனால், ` குருக்கேத்திரம் ` என்றது, அதன்கண் உள்ள தீர்த்தத்தின் மேலதாயிற்று. ` தெற்கு, வடக்கு ` என்றல், விந்த மலையை வைத்து என்க. இத் திருப்பாடலுள், ` குமரி முதல் இமயங்காறும் நன்னெறிச் செலவு சென்று, தீர்த்தங்களின் மூழ்குதலும், தலங்களை வணங்குதலும் வேண்டும் ` என்று அருளியவாறு. ` சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே ` ( தி.6 ப. 36 பா,9) என்றும், ` அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே ` ( தி.6 ப.78 பா.1) என்றும் அருளிச்செய்தார், ஆளுடைய அரசரும்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
People of this world temples which can be called places for penance are fruitful only if people put them to proper use, reaching them.
be clear about this in your mind and being so in the south are available.
the holy waters of Kōtaviri and Kumari.
in the north is available.
bathe in the holy water of beautiful Kurukkēttiram.
in the same manner bow before Ciparppatan on the south and praise Kētāram in the north where the parrots tear the bright fruits of the plantain and eat them, Mountain vintiyam is the dividing line between line between north and south People must go on pilgrimage from Kumari in the South and Imayan in the North and bathe in the holy waters situated in those holy places
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
tha'lisaalaika'l thavamaavathu
thammaippe'ri lan'rae
ku'liyeeru'lang kurukkaeththirang
koathaaviri kumari
the'liyeeru'lanj seeparppatham
the'rkuvadak kaakak
ki'livaazhaio'n kanikee'riyu'n
kaethaarame neerae
சிற்பி