ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 4 பண் : நட்டபாடை

உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத்
    திழப்பார்களுஞ் சிலர்கள்
வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர்
    மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு
    தவமாவது செயன்மின்
கிழக்கேசல மிடுவார்தொழு
    கேதாரமெ னீரே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

அறிவை அழித்துக்கொண்ட மாந்தர்களே, பொருளைத்தேடி, உழக்கரிசியை அட்டு உண்ணுதல் ஒன்றைச் செய்து விட்டு, எஞ்சியவற்றைத் தொகுத்துவைத்துப் பின் இழந்து போவாரும் சிலர் இவ்வுலகில் உளர் ; அவர்கள், ` அறம் ` என்றாலோ, ` அஃது எமக்கு வேண்டா ; யாம் உண்டு உயிர் வாழ்வேம் ` என்று போவர். வஞ்சனையால் தம் வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொள்கின்ற அவர் களோடு கூடி, அவர்களது நோன்பாகிய அச்செயலை நீவிர் செய்யன் மின் ; விடியற்காலையில் பகலவன் வருகையை எதிர்நோக்கி நின்று, மந்திர நீரை இறைத்துக் காலைச் சந்தியை முடிக்கின்றவர்கள் வணங்கு கின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.

குறிப்புரை :

உழக்கு, நாழியின் நாற்கூற்றில் ஒருகூறு. ` உண்பது நாழி ` என்றும், ` நாழி யரிசிக்கே நாம் ` என்றும் ( நல்வழி ) மக்கள்தம் உணவளவு கூறப்படுமாகலின், ` உழக்கு ` என்றது அவர் தம் உண்ணுதற் செயலின் இழிபு தோற்றிற்று என்க. ஏகாரம், செயற்பாலன வாய பிற செயல்களின் நின்று பிரித்தலின், பிரிநிலை. ` படைத்து ` என்றதனை முதற்கண் வைத்து உரைக்க. படைத்தல் - உளவாக்குதல். ` வழக்கு ` என்பது, ` அறிந்தார்க்கு உரிய முறைமை ` என்னும் பொருள தாய், அறத்தைக் குறித்தது. மாந்துதல் - குடித்தல் ; ` அறிவைக் குடித்த ` என்றது, பான்மை வழக்கு, ` மாந்தர் ` என்றது விளி. ` சழக்கு ` என்றது, இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லிக் கரத்தலை. ` பிழைக்கே யென்பர் ` என்பதும் பாடம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Dull-headed people of this world!
accumulating wealth.
eating food prepared from rice being only one fourth of the madras measure.
there are also some who lose, after hoarding the money.
if they are told that doing charity is the proper thing.
they will say it is a mistake to do so do not perform joining with those who fill their stomachs by unrighteous means, that acts of ceremonial fasting which is their action.
utter the name of Kētāram which those perform morning worship, offer ablutions of water facing east at sunrise.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
uzhakkaeyu'ndu padaiththeeddivaith
thizhappaarka'lunj silarka'l
vazhakkaeyeni'r pizhaikkaemenpar
mathimaa:nthiya maa:nthar
sazhakkaepa'ri :ni'raippaarodu
thavamaavathu seyanmin
kizhakkaesala miduvaarthozhu
kaethaarame neerae
சிற்பி