ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 2 பண் : நட்டபாடை

பறியேசுமந் துழல்வீர்பறி
    நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளு
    நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல
    நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு
    கேதாரமெ னீரே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

வேறொன்றும் செய்யாது உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே, இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவ தாதலை அறிகின்றிலீர் ; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்று வன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் உளவாகுமோ ? ஆகா வாகலின், இப்பொழுதே, அறிய வேண்டுவனவற்றை அறியும் வானுலகத்தவரினும் மேலான அறிவுடன், நல்ல நறுமணத்தையுடைய நீரையும், சோற்றையும் விருந்தினருக்கு, இன்சொற் பேசி இடுகின்றவர் கள் வணங்குகின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.

குறிப்புரை :

` கூவிய ` என்றது, ` செய்யிய ` என்னும் வினையெச்சம். அது, ` கொளும் ` என்றதனோடு முடிந்தது, கொள்ளுதல் - மனத்துட் கொள்ளுதல். ` நாளால் ` என்றது, வேற்றுமை மயக்கம். ` உளவே ` என்ற ஏகாரம், வினா. வானின் உள்ளாரை, ` வான் ` என்று அருளினார். அவர் அறிவது, துறக்க இன்பத்தையேயாகலின், அதனை விரும்பாது, வீட்டின்பத்தை விரும்புவாரை, அவரினும் மேலாய அறிவுடைய வராக அருளினார். இனி, ` அறிவானிலும் அறிவான் ` என்றதற்கு, ` அறிகின்ற உயிரின்கண்ணும் அறிவாய் இருந்து அறிபவன் ` என. இறைவற்கு ஆக்கி உரைப்பாரும் உளர். விலாமிச்சை வேர் முதலியன இடப்படுதலின், நீர், நறுமணம், உடையதாயிற்று. ` கிறி ` என்றது, மகிழ்வுரைகளை.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
People of this world your wander carrying the burden of the body.
you do not know that foxes tear this body and eat it, after your death.
can you think of charity for you when the surnmons of the god of death come to take your life on the appointed day of death?
therefore utter the name of Kētāram which is worshipped by people who offer guests speaking kind words good fragrant water and food with an intelligence knowing better than the celestials who know what is to be known.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
pa'riyaesuma:n thuzhalveerpa'ri
:narikee'ruva tha'riyeer
ku'rikooviya koo'r'rangko'lu
:naa'laal a'ram u'lavae
a'rivaanilum a'rivaan:nala
:na'ru:neerodu soa'ru
ki'ripaesi:nin 'riduvaarthozhu
kaethaarame neerae
சிற்பி