ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 1 பண் : நட்டபாடை

வாழ்வாவது மாயம்மிது
    மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
    பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங்
    கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக்
    கேதாரமெ னீரே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உலகீர், பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; அதன் பொருட்டு, நீவிர் நீட்டியாது விரைந்து அறத்தைச் செய்ம்மின்கள் ; பெரிய கண்களையுடையவனாகிய திருமாலும், மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும், வானின்மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.

குறிப்புரை :

முதற்கண் வந்த, ` ஆவது ` என்பது, எழுவாய்ப்பொருள் தருவதோர் இடைச்சொல். ` போவது ` என்றது, ` போகவேண்டுவது ` எனப் பொருள் தந்தது. பறி - பை ; அது பை போல்வதாகிய உடம்பைக் குறித்தது. அதனை வருகின்ற திருப்பாடலிலுங்காண்க. ` பறிதான் வாழ்வாவது ` என மேலே கூட்டுக. ` தான் ` என்பது, அசைநிலை.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
that the body which creates hunger is not permanent, is unreal.
it is definite that it will become dust.
the ocean of births and deaths should be got rid of.
People of this world Do charity without a moment`s delay.
utter the name of Kētāram which is the place of Civaṉ who was the cause for Māl who has eyes and Piramaṉ who is in a lotus flower respectively to dig into the earth and to fly in the sky.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
vaazhvaavathu maayammithu
ma'n'naavathu thi'n'nam
paazhpoavathu pi'ravikkadal
pasi:noayseytha pa'rithaan
thaazhaatha'ranj seymminthadang
ka'n'naanmala roanum
keezhmaelu'ra :nin'raanthiruk
kaethaarame neerae
சிற்பி