ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
071 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 9

கந்தமா தனங்கயிலை மலைகே தாரங்
    காளத்தி கழுக்குன்றங் கண்ணா ரண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
    மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்
விந்தமா மலைவேதஞ் சையம் மிக்க
    வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்
    ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கந்தமாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், இடமகன்ற அண்ணாமலை, தென்றல் தவழும் பொழில்களை உடைய சரிவுகளுடன் கூடிய வடபற்பதம், மகேந்திரமாமலை, நீலமலை, ஏமகூடமலை, விந்தமாமலை, வேதமலை, சையமலை, சோலைகள் மிக்க அகன்ற பொதியின் மலை. மேருமலை, உதயமலை, அத்தமலை ஆகிய இவையும் பிறவுமாகிய சந்திரனை முடியிலணிந்த சிவபெருமானுடைய மலைகளைப் புகழ்வோம். எம் இடர்கெடத் திசைநோக்கி நின்று அவற்றைப் புகழ்ந்து போற்றுவோம்.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், மலையாய் உள்ள தலங்களை வகுத்து அருளிச்செய்தது ; ` மலை ` என்பதனை எடுத்தோதியும், ஓதாதும் அருளிச்செய்தார், அஃதின்றி நிற்கும் சொற்கள் தாமே பெரும் பான்மையும், அவற்றின் சிறப்புப் பெயராய் நிற்றலின். பற்பதம், கயிலை இவை வடநாட்டுத் தலங்கள். ` வடபற்பதம் ` என்றதனால், திருப்பருப்பதம் இந்திர நீலப்பருப்பதம் இரண்டுங் கொள்க. கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், அண்ணாமலை, ஏமகூடம், பொதியில் இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன. கந்தமாதனம், மகேந்திரம், நீலமலை, விந்தம், சையம், மேரு, உதயமலை, அத்தமலை இவை வைப்புத் தலங்கள். வைப்புத் தலங்களுள், ` வேத மலை ` எனவும் ஒன்று உளது போலும் ! மந்தம் - மந்தானிலம் ; தென்றற் காற்று. ` ஏத்துவோம் ஏத்துவோம் ` என அடுக்காக இயைக்க.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
These are the mountains where Chandrasekara abides.
We will hail,
yea,
hail thus that our sins may perish: ``Kanthamaathanam,
Mount Kailas,
Kedaaram,
Kaalatthi,
Kazhukkunaram,
beauteous Annaa,
Northern Parvatam in whose slopes dight with gardens Gentle wind wafts,
Mahendra Maamalai,
Neelam,
Yemakootam,
Vindhya,
Vedam,
Saiyam,
Great and glorious Potiyil,
Meru,
Udaiyagiri,
and Asthamanagiri.
``
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ka:nthamaa thanangkayilai malaikae thaarang
kaa'laththi kazhukkun'rang ka'n'naa ra'n'naa
ma:nthamaam pozhi'rsaaral vadapa'rpatham
makae:nthiramaa malai:neelam aema koodam
vi:nthamaa malaivaethanj saiyam mikka
viyanpothiyin malaimaeru uthayam aththam
i:nthusae karanu'raiyum malaika'l ma'r'rum
aeththuvoam idarkeda:nin 'raeththu voamae.
சிற்பி