ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
071 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 7

கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
    கண்ணுதலோன்நண்ணுமிடம்அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்
    நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார்தென் மதுரைநக ரால வாயில்
    மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
    புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கடுக்காயைத் தின்னும் வாயினராகிய சமணரை நீக்கி என்னை அடிமை கொள்ளும் கண்ணுதற் கடவுளாகிய சிவ பெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில், நெடு வாயில், பயிர் நிறைந்த வயல் சூழ்ந்த நெய்தல்வாயில், நிலவும் முல்லைவாயில், ஞாழல்வாயில், வையை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து மன்னும் ஆலவாயில், அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் குடவாயில், குண வாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், ` வாயில் ` என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது. ` முல்லை வாயில் ` என்னும் பெயருடைய தலங்கள் தொண்டைநாட்டில் ஒன்றும், சோழநாட்டில் ஒன்றும் உள்ளன ; அவை முறையே, ` வட திருமுல்லைவாயில், தென் றிருமுல்லை வாயில் ` என வழங்கப்படும். ` ஆலவாய் ` என்பதே மதுரைத் திருக்கோயிற் பெயராயினும் ` ஆலவாயில் ` என்றலும் வழக்காதல் பற்றி, ` மதுரை நகர் ஆலவாயில் ` என்று அருளிச்செய்தார் ; ` நீள்கடிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே ` ( தி.3. ப.52. பா.1) என்று அருளிச் செய்த திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பாடலிலும், ` ஆலவாயில் ` என வந்தது என்றலே சிறப்புடைத்தாதல் அறிக. புனவாயில், பாண்டிநாட்டுத் தலம். குடவாயில் சோழநாட்டுத் தலம். அண்ணல்வாயில், நெடுவாயில் நெய்தல்வாயில், ஞாழல் வாயில், குணவாயில் இவை வைப்புத் தலங்கள். கடு வாயர் - கடுக்காயைத் தின்னும் வாயினை யுடையவர் ; சமணர். கடுக்காயை அவ்வப்பொழுது வாயிலிட்டுத் தின்னுதல் சுவைப் புலனை விரும்பச் செய்யும் நாவினது ஆற்றலைக் கெடுத்தற் பொருட்டு. ` மடு ` என்றது வையை ஆற்றினை. ` மடுவார் ` என்றாயினும், ` மடு ஆர் ` என்றாயினும் கொள்க. ` ஆன ` என்புழி, ` வாயில் ` என்பது எஞ்சி நின்றது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Cruel karma gets not attached to them who enter All the Vaayils such as Annalvaayil in which abides The Lord who has an eye in His forehead and who Redeemed me from the company of myrobalan-eaters,
Neduvaayil,
Neithalvaayil rich in fertile fields,
Mullaivayil,
Gnaazhalvaayil,
Aalavaayil Of the city of Madurai in the South,
rich in tanks,
Punavaayil upon the billowy sea,
Kudavaayil Abounding in lofty mansions and Gunavaayil.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kaduvaayar thamai:neekki yennai yaadko'l
ka'n'nuthaloan:na'n'numidama'n'nalvaayil
:neduvaayil :ni'raivayalsoozh :neythal vaayil
:nikazhmullai vaayilodu gnaazhal vaayil
maduvaarthen mathurai:naka raala vaayil
ma'rikadalsoozh punavaayil maada :needu
kudavaayil ku'navaayi laana vellaam
pukuvaaraik koduvinaika'l koodaa van'rae.
சிற்பி