ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
071 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 6

மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
    மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
    சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூ ராலங் காடு
    பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
    வெண்காடும் அடையவினை வேறா மன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மலையரசன் மகளாகிய பார்வதியொடு மகா தேவன் மகிழ்ந்துறையும் மறைக்காடு, வளப்பம் மிக்க சோலைகள் சூழ்ந்த தலைச்சங்காடு, தலையாலங்காடு, பரந்த கடலால் சூழப் பட்டதும், அழகியதும், குளிர்ந்ததுமாகிய சாய்க்காடு, மோதித்தள்ளும் நீரையுடைய கொள்ளிக்காடு, பலரும் புகழும் பழையனூர் ஆலங்காடு, பனங்காடு, பாவை போன்ற பெண்கள் தங்கள் பாவம் நீங்குதற்காக விலை ஏறப்பெற்ற தம் வளையல்கள் கலந்து ஒலிக்கும்படி ஆடும் பொய்கைகளை உடைய வெண்காடு ஆகியவற்றை அடைந்து வணங்க வினைகள் விட்டு நீங்கும்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம், ` காடு ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது. சாய்க்காடு, கொள்ளிக்காடு இவை சோழநாட்டுத் தலங்கள். பனங்காடு, வைப்புத் தலம். மறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, ஆலங்காடு, வெண்காடு இவை மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன. பழையனூர், ஆலங்காட்டிற்குச் சார்பாய் உள்ளது. விலை ஆடும் வளை - விலை ஏறப்பெற்ற வளையல்கள்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
If Maraikkaadu--the abode of the God of gods who is Concorporate with the Mountain`s Daughter--,
Talaicchangkaadu Girt with uberous groves,
cool Saaikkaadu circled by The extensive main,
Kollikkaadu rich in streams,
Pazhaiyanoor Aalangkaadu whose praise is sung by many,
Panangkaadu and Vennkaadu where,
to wash sins away,
Damsels decked with precious bangles,
joyous plunge into tanks,
Are reached,
Karma flees away.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
malaiyaartham maka'lodumaa thaevan saerum
ma'raikkaadu va'npozhilsoozh thalaichchang kaadu
thalaiyaalang kaaduthadang kadalsoo zha:ntha'n
saaykkaadu tha'l'lupuna'r ko'l'lik kaadu
palarpaadum pazhaiyanoo raalang kaadu
panangkaadu paavaiyarka'l paavam :neengka
vilaiyaadum va'laithi'laikkak kudaiyum poykai
ve'nkaadum adaiyavinai vae'raa man'rae.
சிற்பி