ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
071 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 5

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
    பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
    கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
    இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
    தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நீர்ப்பெருக்கினை உடைய கங்கையாற்றைச் சடையிலணிந்த சிவபெருமான் திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன், கடம்பூர் கரக்கோயில், மணங்கமழும் பொழில்கள் சூழ்ந்த ஞாழற்கோயில், கருப்பறியலூரில் மலைபோன்று விளங்கும் கொகுடிக்கோயில், அந்தணர்கள் வேதம் ஓதி வழிபாடு செய்து துதிக்கும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயிலாகிய திருக் கோயில், என்னும் சிவபெருமானுறையும் கோயில்களை வலம் வந்து படிமீது வீழ்ந்து வணங்கத் தீவினைகள் யாவும் தீரும்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம், ` கோயில் ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது. பிற்காலத்தில், ` தஞ்சைப் பெருங்கோயில் ` என்பதுபோல, அக்காலத்தில், ` பெருங்கோயில் ` என எழுபத்தெட்டுக் கோயில்கள் இருந்திருத்தல்வேண்டும். ` அம்பர்ப் பெருங்கோயில் ` என்பது ஒன்று திருப்பதிகத்தாற்றானே காணப்படுகின்றது. இனி, ` பெருங்கோயில் எழுபதினோடு எட்டு ` என்று அருளப்பட்டவை கோச்செங்கட்சோழ நாயனாரால் எடுக்கப்பட்ட கோயில்கள் ` என்றலும் பொருந்தும். ` கரக்கோயில் ` என்பது, கடம்பூர்க்கோயில் ; ` கொகுடிக் கோயில் ` என்பது கருப்பறியலூர்க்கோயில் ; இவை சோழ நாட்டில் உள்ளவை. ` கரக்கோயில் ` என்பது, ` இந்திரன் கரத்தால் அகழ்ந்த கோயில் ` எனவும், ` கொகுடி ` என்பது ` ` முல்லைக் கொடியின் வகை ` எனவும் கூறுவர். இளங்கோயிலும், ஆலக்கோயிலும் மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன. ஞாழற் கோயில், மணிக் கோயில் இவை வைப்புத் தலங்கள். இருக்கு - வேதம் ; மந்திரமுமாம். ` திருக்கோயிலாகிய, சிவன் உறையும் கோயில் ` என்க. இதனால், இத்திருப்பெயர் சிவன் கோயிலுக்கே உரித்தாதல் அறிக. இவ்வாறாகவே, ` திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் ` ( தி.6. ப.95. பா.5.) ` திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனி தன்னை ` ( சிவஞான சித்தி. சூ. 12-4) என்றவற்றின் பொருள் இனிது உணர்ந்து கொள்ளப்படும். சூழ்தல் - வலம் வருதல்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
If the seventy-eight great temples of the Lord Whose matted crest is adorned with the great flood,
Karakkoyil,
Gnaazharkoyil girt with well-protected Groves,
the hill-like Kokudikkoyil of Karruppariyal,
IIangkoyil where with the chanting of the Rig Veda The Brahmins hail and adore the Lord,
Manikkoyil,
Aalakkoyil and every Tirukkoyil where Siva abides,
Are circumambulated and hailed in humble Adoration,
evil karma will get annulled.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
perukkaa'ru sadaikka'ni:ntha perumaan saerum
perungkoayil ezhupathinoa deddum ma'r'rung
karakkoayil kadipozhilsoozh gnaazha'r koayil
karuppa'riya'r poruppanaiya kokudik koayil
irukkoathi ma'raiyavarka'l vazhipad daeththum
i'langkoayil ma'nikkoayil aalak koayil
thirukkoayil sivanu'raiyung koayil soozh:nthu
thaazh:nthi'rainjsath theevinaika'l theerum an'rae.
சிற்பி