ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
071 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 3

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
    குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி
    கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடி நல்வேட்டக் குடி
    வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி
புற்குடிமா குடிதேவன் குடிநீலக்குடி
    புதுக்குடியும் போற்றஇடர் போகு மன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, கற்குடி, இனிய களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக் குடி, நன்மமைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க் குடி, புற்குடி, மாகுடி,, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி, என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும்.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், ` குடி ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது. நாட்டியத்தான் குடி, செங்காட்டங்குடி, வேட்டக்குடி, நீலக்குடி இவை சோழநாட்டுத் தலங்கள். வேள்விக்குடி, கற்குடி, வேதிகுடி, தேவன்குடி இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப் பட்டன. விற்குடியை, ` வீரட்டம் ` என்பது நோக்கி மேலைத் திருத்தாண்டகத்துள்ளும், ` குடி ` என்பது நோக்கி இத்திருத்தாண்டகத்துள்ளும் அருளிச் செய்தார். செம்பங்குடி, நல்லக்குடி, தென்களக்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, புதுக்குடி இவை வைப்புத் தலங்கள். ` விடைவாய் திருப்பதிகம் ` என ஒரு திருப்பதிகம், கல்வெட்டிலிருந்து மிக அண்மையில் கிடைத்து, சென்னை சைவசித்தாந்த சமாசத்தினரால் பதிப்பிக்கப் பெற்றது. அத்தலம், விடைவாய்க்குடியே போலும்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Troubles will cease if Sembangkudi of the One who is Supremely desirable and whose goodly flag sports the Bull,
Nallakkudi,
lovely Naattiyatthaangkudi,
Karkudi,
Tenkalakkudi,
Sengkaatangkudi,
Karunthittaikkudi,
Kataiyakkudi,
Virkudi sweet to behold,
Vellvikkudi,
Goodly Vettakkudi,
Vedikudi,
Maanikudi,
Vitaivaaikkudi,
Purkudi,
Devankudi,
Neelakkudi And Pudukkudi are duly hailed.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:na'rkodimael vidaiyuyarththa :nampan sempang
kudi:nallak kudi:na'li:naad diyaththaan kudi
ka'rkudithen ka'lakkudiseng kaaddang kudi
karu:nthiddaik kudikadaiyak kudikaa 'nungkaal
vi'rkudivae'l vikkudi :nalvaeddak kudi
vaethikudi maa'nikudi vidaivaayk kudi
pu'rkudimaa kudithaevan kudi:neelakkudi
puthukkudiyum poa'r'raidar poaku man'rae.
சிற்பி