ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
071 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 1

பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
    புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
    கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
    செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
    பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி, வருந்தி அழியுமாறு சலந்தரனைச் சக்கரத்தால் பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, மது நிறைந்து மலர்கள் மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி, மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன் பள்ளி, செழிப்புமிக்க நனிபள்ளி, தவப்பள்ளி புகழ்பொருந்திய பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமைமிகக் காப்பாராவார்.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், ` பள்ளி ` எனவருவனவற்றை வகுத்தருளிச்செய்தது. சக்கரப்பள்ளி, நனிபள்ளி சோழநாட்டுத் தலங்கள். காட்டுப் பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன் பள்ளி, கொல்லியறைப் பள்ளி மேலைத் திருப்பதிகத்துட் கூறப்பட்டன. ` சிராப் பள்ளி ` என்பது எதுகை நோக்கிக் குறுகிற்று. பொருப் பள்ளி, சிவப் பள்ளி, தவப் பள்ளி, பரப்பள்ளி இவை வைப்புத் தலங்கள். வரை - மலை. புலந்து அழிய - பகைத்து அழிய. பொன் - அழகு. கள் ஆர் - தேன் நிறைந்த. ` கலவச் சாரல் ` என்பது மெலித்த லாயிற்று. கலவம் - மயில். ` பரலோகத்து ` என்புழி, இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. பாலிப்பார் - காப்பார் ; ஆளுவார்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
All those that chant thus,
even thus: ``Poruppalli,
auric Chakkarappalli of Him who smote with a bow the three Hostile towns and cut into two Jalandhara,
Tiruk- kaattuppalli,
Melliferous and fragrant Kolliyaraippalli,
Sirappalli In whose domain peacocks abound,
Sivappalli,
Cemponpalli,
uberous Nanipalli,
Tavappalli And glorious Parappalli,
will sweetly rule the supernal world.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
poruppa'l'li varaivillaap puramoon 'reythu
pula:nthazhiyach sala:ntharanaip pi'la:nthaan po'rsak
karappa'l'li thirukkaaddup pa'l'li ka'l'laar
kamazhkolli ya'raippa'l'li kalavanj saara'r
sirappa'l'li sivappa'l'li sempon pa'l'li
sezhu:nani pa'l'lithavap pa'l'li seeraar
parappa'l'li yen'ren'ru pakarvoa rellaam
paraloakath thinithaakap paalip paarae.
சிற்பி