ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 6

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
    கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
    அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
    சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தன் திருமேனியின் இடப்பகுதியாகக் கொண்டவன். மேம்பட்ட வயிரமலைபோன்ற வடிவினன். அலரும்பருவத்து அரும்பாய்க் கட்டிய கொன்றைப் பூமாலையான். நால்வேதமும் ஆறங்கமும் ஆயினான். வண்டுகள் விரும்பும் நறுமணச்சோலைகள் சூழ்ந்த அழகிய ஆரூரில் மேல் நோக்கும் சுடரொளி போன்றவன். ஒளிப்பிழம்பு அணைதல் இல்லாத விளக்குப் போன்றவன். வீடுபேற்று இன்பமாக இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை :

வெண்ணீற்றுப் பூச்சில் ஈடுபட்டு. ` கனவயிரக் குன்றனைய காட்சியானை ` என்றருளிச் செய்தார். திருவாரூரிற் காணவேண்டும் உணர்வுண்டாயினமை, ` ஆரூர்ச் சுடர்க்கொழுந்தை ` என்றருளியதனாற் பெறுதும். பிற இடங்களினும் இவ்வாறே, பின்னர்க் காணுமதனையேனும், முன்னர்க் கண்டதனையேனும், அவ்விடங்களில் இறைவர் செய்த அருட்செயல்களையேனும் நினைந்து அருளிச்செய்யுமாற்றினை இடம் நோக்கியுணர்ந்துகொள்க. சுரும்பு - வண்டு. கடிபொழில்கள் - நறுமணச் சோலைகள். துளக்கு - அசைவு.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
He is concorporate with Her whose words Are nectarean like the sugarcane;
He is a hill of dazzling diamond;
He wears a wreath of konrai flowers;
It is He who is the rare Vedas And their sextuple Angas;
He is the bright-rayed Flame of southern Aaroor Girt with fragrant groves where bees buzz;
He is the unwavering lamp of Light,
The Ens Entium;
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
karumpamarum mozhimadavaa'l pangkan thannaik
kanavayirak kun'ranaiya kaadchi yaanai
arumpamarum poongkon'raith thaaraan thannai
aruma'raiyoa daa'rangka maayi naanaich
surumpamarung kadipozhilka'l soozhthen naaroorch
sudarkkozhu:nthaith thu'lakkillaa vi'lakkai mikka
perumporu'laip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae.
சிற்பி