ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 9

வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர் களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின் திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்களை விட்டு ஓடும். இஃது உண்மை.

குறிப்புரை :

வில் - மேருவாகிய வில். வட்டப்பட - அரைவட்டமாக அமைய. வாங்கி - வளைத்து. அவுணர் - திரிபுரத்தசுரர்கள். வல்லை வட்டம் மதில் ; வல் - விரைவு. வட்டம் மதில் - வட்ட வடிவாயமைந்த கோட்டைகள். ஒல்லை - விரைவு. வட்டம் - தொழுவாரைச் சூழ்ந்த இடம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Having bent the bow to form a semi circle one who destroyed (in the twinkling of the eye) simultaneously the three circular forts of the Avuṇar (the destruction of Tiripuram) the actions of people who worship with their hands even the direction in which the surrounding area of Tillai lies.
It is quite true that they would flee quickly crossing their limits.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
villai vaddap padavaangki yavu'nartham
vallaivad dammathil moon'rudan maayththavan
thillaivad da:nthisai kaithozhu vaarvinai
ollaivad dangkada:n thoadutha lu'nmaiyae.
சிற்பி