ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 8

விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்நி றைந்த கடிபொழி லம்பலத்
துள்நி றைந்துநின் றாடு மொருவனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

யான் என்னும் செருக்கு மிகுந்த அயனும் மாலும் காண்டற்கு அரிதாய், ஆகாயத்தையளாவியெழுந்த சோதிப்பிழம்பு ஒப்பற்ற பெருந்தலைவனாய், தேனிறைந்த மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லையம்பலத்துள் திருச்சிற்றம்பல வடிவாய் நிறைந்து பஞ்சகிருத்திய நடனத்தைச் செய்யும். தொழக்கல்லாதவர்களாகிய அயன்மாலுக்கு அரிய முதல்வன் அன்பால் வழிபட்ட வியாக்கிரர், பதஞ்சலியார் என்னும் முனிவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றித் தன்னியல்பை உணர்த்திப் பேரின்பம் அருளினன் என்றபடி.

குறிப்புரை :

இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை ( அப். தி.5 ப.95) பார்க்க. ` விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லையிலாதானே ` ( தி.8 திருவாச. சிவ.) எண் - எண்ணம். கண் நிறைந்த - கள் நிறைந்த. ஞானமன்றில் ஆனந்தக் கூத்தாடுதலின் நிறைந்து நின்றாடும் என்றார். சிவபிரானை ஒருவன் என்றல் உபநிடத வழக்கு. முழுமுதல் என்னுங் கருத்தை உடையது. ( வடமொழி சுலோகம் ) ` ஒருவன் என்னும் ஒருவன் காண்க ` என்பது திருவாசகம். ` ஒளிமணி வண்ணன் என்கோ, ஒருவன் என்றேத்த நின்ற நளிர்மதிச் சடையன் என்கோ ` என நம்மாழ்வாரும் இக்கருத்தை வலியுறுத்துதல் காண்க. ` ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ` எனத் திருத்தாண்டகத்தினும் அருளிச்செய்வர்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
the form of a hot fire which occupied completely the sky.
cannot be known by the two, (Brahmaṉ and Vishnu) who pervaded the minds of their devotees.
Having pervaded the ampalam surrounded by sweet-smelling gardens full of honey the unequalled one who dances there.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
vi'n:ni 'rai:nthathoar vevvazha linnuru
e'n:ni 'rai:ntha iruvark ka'rivo'naak
ka'n:ni 'rai:ntha kadipozhi lampalath
thu'l:ni 'rai:nthu:nin 'raadu moruvanae.
சிற்பி