ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 7

ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னாரிளை யார்விட முண்டவெம்
அருத்த னாரடி யாரை யறிவரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

தனிமுதற்பொருள் உலகங்களுக்கெல்லாம் ஒரே விளக்காய் உள்ளவர் ; செம்மையார் ; தில்லைச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடுபவர் ; முதியார் ; இளையார் ; நஞ்சுண்ட எம்செல்வர் ; அடியாரை அறிவார்.

குறிப்புரை :

ஒருத்தனார் - ஏகன் அநேகன் இறைவன் ( தி.1. ப.5.) உலகங்கட்கு ஒரு சுடர் - ` சுடர்விட்டுளன் எங்கள் சோதி ` ( தி.3. ப.54. பா.5) ` சோதியே சுடரே சூழொளி விளக்கே ` ( தி.8 திருவாச. அருட். 1) ` சுடர்ச் சோதியுட் சோதியான் ` ( சம்பந் ) ` தூயநற் சோதியுட் சோதி ` ( தி.9 திருவிசைப். 2.) ` உலக உயிர்க்கெல்லாம் ஒருகண்ணே ` ( இருபா .20). திருத்தம் - செம்மை. திருத்தன் - செம்பொருள். திருப்தி உடையவன் என்றலும் ஆம். திருப்தி எண்குணங்களில் ஒன்று. தீர்த்தனுமாம். உயிர்களைத் திருத்தி யாட்கொண்டவன் என்றலுமொன்று. ` திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங்கொள் கயிலாயா ` ( தி.7. ப.47. பா.8.) விருத்தனார் இளையார் - ` விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து ` ( தி.1. ப.52. பா.6.) அருத்தனார் - எமக்கு மெய்ப் பொருளாயுள்ளவர். அருத்தம் - நீடுலகிற்பெறும் நிலையுடைய பெருஞ்செல்வம். அடியாரை அறிவர் - ` அடியார் அடிமை அறிவாய் போற்றி ` ( தி.5. ப.30. பா.3.) 4,9 பார்க்க. ( தி. 5, ப. 13, பா. 10) பார்க்க. ( தி. 6. ப. 85. பா. 2.) பார்க்க. ( தி. 4. ப.23. பா.2.) பார்க்க.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
He is one without parallel.
He is the matchless light for all the worlds.
He is the pure person.
one who resides in Ciṟṟampalam in Tillai.
He is the aged elder.
He is the youth our Lord who has on his half Umā, and drank the poison, will know his devotees (and bestow his grace upon them).
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
oruththa naarula kangkad korusudar
thiruththa naarthillaich si'r'ram palavanaar
viruththa naari'lai yaarvida mu'ndavem
aruththa naaradi yaarai ya'rivarae.
சிற்பி