மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 2 பண் : சாதாரி

சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறுமிசை பாடிவசி பேசுமர னார்மகிழ்விடம்
தாதுமலி தாமரை மணங்கமழ வண்டுமுர றண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகி னீடுதவி மாணிகுழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

ஒளிமிகுந்த திருவெண்ணீற்றினைத் திருமேனியில் உத்தூளணமாகப் பூசி, தோலை ஆடையாக அணிந்து, தெருக்களில் பெண்கள் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று இசைப்பாடல்களைப் பாடி வயப்படுத்தும் பேச்சுக்களைப் பேசும் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலம் மகரந்தப்பொடிகள் மிக்க தாமரை மலர்கள் மணம் வீசுவதும், வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய வயல்களையுடையதும், கடலலைகளின் ஓசை மிகுந்ததும் ஆகி விளங்குகின்ற திருமாணிகுழி என்பதாம்.

குறிப்புரை :

சோதி மிகு - ஒளி மிகுந்த. நீறு அது - திருநீற்றை. மெய்பூசி - திருமேனியில் உத்தூளித்து. ஒரு தோல் உடை புனைந்து - தோலை ஆடையாக அணிந்து, தெருவே - தெருக்களில். மாதர் மனைதோறும் - பெண்டிர் உள்ள ஒவ்வொரு வீட்டிலும். இசைபாடி - இசைப் பாடல்களைப் பாடி. வசி - வயப்படுத்தும் பேச்சுக்களை பேசும். ( அரனார் மகிழ்வு இடமாவது ) தாது மலி - மகரந்தப் பொடிகள் மிக்க, ( தாமரை ). மணம் கமழ - மணம் வீச. வண்டு முரல் - வண்டுகள் ஒலிக்கும். பழனம் மிக்கு - வயல்கள் மிக்கு. ஓதம் மலி - ஓசை மிகுந்த. வேலை புடை சூழ் - கடல் சூழ்ந்த, உலகில் - இவ்வுலகில், உதவி மாணிகுழியே - திருமாணிகுழியேயாம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
smearing the sacred ash of excessive brilliance.
putting on beautifully a dress of a skin.
singing music in every house of the ladies in the streets.
the place where Araṉ who speaks fascinating words rejoices to dwells.
increasing in cool fields where the bees hum to spread the fragrance of the lotus which has plenty of pollen.
is Utavi Māṇikuḻi which has been in existence since very old times, in the world surrounded on all sides by ocean which abounds in waves.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
soathimiku :nee'rathumey poosiyoru thoaludai punai:nthutheruvae
maatharmanai thoa'rumisai paadivasi paesumara naarmakizhvidam
thaathumali thaamarai ma'nangkamazha va'ndumura 'ra'npazhanamik
koathamali vaelaipudai soozhulaki needuthavi maa'nikuzhiyae.
சிற்பி