மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 7 பண் : காந்தார பஞ்சமம்

சாதி யார்பளிங் கின்னொடு வெள்ளிய சங்க வார்குழை யாய்திக ழப்படும்
வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள்
ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம் அங்கை யால்தொழ வல்லடி யார்களை
வாதி யாதகலும்நலி யாமலி தீவினையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நல்ல இனத்துப் பொருந்திய பளிங்கொடு வெண் சங்குகொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை உடையானே, விளங்குகின்ற மறையோனே, விகிர்தனே, திருவிழாக்கள் நிறைந்த அழகிய தில்லையுள் முதல்வனாகிய நினக்கு இடமான திருச்சிற்றம்பலத்தை அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களைத் தீவினைப் பெருக்கம் வாதிக்காது ; வருத்தா தொழியும்.

குறிப்புரை :

சாதியார் பளிங்கின் ஓடு - உயர்ந்த சாதிப்பளிங்கு போலும், வார் - தொங்கும், சங்கக்குழையாய் - சங்கினாலாகிய காதணியையுடையவனே. இன் - சாரியை, ஓடு ஒப்புப் பொருளில் வந்தது. ` ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல் ` என்புழிப்போல. திகழப்படும் வேதியா - வேதங்களில் விளங்க எடுத்துப் பேசப்படு பவனே. விகிர்தா - மாறானவனே. அம்கையால் - அழகிய கைகளால். ` என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே... வழிபடும் அதனாலே ` ( தி.2 ப.106 பா.1) யென்றபடி சிவபெருமானைக் கும்பிட ` எத்தனை கோடி யுகமோ தவம் செய்திருக்கின்றன ` என்று பாராட்டற்குரிய தன்மை பற்றிக் ` கைகளால் தொழ ` - என வேண்டாது கூறினார், வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய் வாழ்த்த வைத்து என்பது போலக் கைபெற்றதன் பயன் அவனைக் கும்பிடற்கே யெனல் தோற்றுவித்தற்கு. அதனை, ` கரம் தரும் பயன் இது என உணர்ந்து... பெருகியதன்றே ` என்னும் ( திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் 61) சேக்கிழார் பெருமான் திருவாக்கானும் உணர்க. மலி - மிக்க. நலியா - துன்புறுத்தாதன ஆகி, வாதியாது - எதிரிட்டு நில்லாமல், அகலும் - நீங்கும். ` வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே `( தி.2 ப.106 பா.11) என்ற இடத்தும் ( வாதியாது - பாதியாது ) இப்பொருளில் வருதல் காண்க. வல்ல - குறிப்புப் பெயரெச்சத்தின் ஈறு தொக்கது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
you who are wearing an ear-ring made of couch which is like the superior marble.
oh shining Brahmin among gods, or one who is praised in the vētams God, entirely different from the world.
the ciṟṟampalam which is the abode for you who is the primordial in beautiful tillai of perpetual festivals.
the abundant evil actions will part from the devotees who are able to worship with beautiful hands, without afflicting them.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
saathi yaarpa'ling kinnodu ve'l'liya sangka vaarkuzhai yaaythika zhappadum
vaethi yaavikir thaavizha vaara'ni thillaithannu'l
aathi yaaykkidam aayasi'r 'rampalam angkai yaalthozha valladi yaarka'lai
vaathi yaathakalum:nali yaamali theevinaiyae.
சிற்பி