மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 5 பண் : காந்தார பஞ்சமம்

தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் தூம ணிமிட றாபகு வாயதோர்
பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்கா
தில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழ
இல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

திரிபுரத்தை எரித்தொழிக்க மலை வில்லால் தீக்கணையை எய்தவனே, பழந் தேவர் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் கருணைப் பெருக்கால், நஞ்சினை உண்டதொரு தூய நீல மணி போலக் கறுத்த திருக்கழுத்தினனே ! பற்கள் நிறைந்த பிளந்த வாயுடையதொரு தலையில் பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே ! தில்லைவாழந்தணர் வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த சேவடியைக் கைகளால் தொழுதலாலும் இருவினையும் பற்றறக் கழியும்.

குறிப்புரை :

தொல்லையார் - தொன்மையுடைய தேவர்கள், தூ - தூய,( கலப்பில்லாத ) மணி - நீல ரத்தினம் போன்ற. மிடறா - கண்டத்தையுடையவனே ! பகுவாய் - பிளந்த வாய். தலை - மண்டையோடு. பண்டரங்கம் - பாண்டரங்கக் கூத்து எனவும், ` மதில் எரிய எய்தவனே ` எனவும் ( உன் ) சேவடி கைதொழ வினை இல்லையாம் எனவும் கூட்டுக. திரிபுரதகனம் செய்த மகிழ்ச்சியால் தேரே மேடையாக நின்று சிவபெருமான் ஆடிய கூத்தைப் ` பாண்டரங்கம் ` என்பர். அது ` திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் தேரே யரங்கமாக ஆடிய கூத்தே பாண்டரங்கமே ` என்பதால் அறிக.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
in order that the old celestials gods might taste the ambrosia.
one who has a neck like pure sapphire by devouring the poison.
in the skull which is split and full of teeth.
one who performed the dance of pāṇtaraṅkam and wandered receiving alms in the skull by worshipping at the ciṟṟampalam which is worshipped and praised by the brahmins of tillai.
to worship with both the hands the red feet wearing anklets.
Both the good and bad actions will vanish.
Oh!
, one who discharged arrows at the forts to burn them.
the name of the dance which Civaṉ performed out of joy after burning the three cities, standing on the chariot using it as an arena.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
thollai yaaramu thu'n'na:nanj su'ndathoar thooma 'nimida 'raapaku vaayathoar
pallai yaarthalai yi'rpali ae'r'ruzhal pa'ndarangkaa
thillai yaarthozhu thaeththusi'r 'rampalam saertha laalkazha'r saevadi kaithozha
illai yaamvinai thaaneri yammathil eythavanae.
சிற்பி